ரூ.100 கோடி வரையிலான கடனுக்கு உத்தரவாதம்! MSME-க்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
அமெரிக்க அரசின் வரி விதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள், இந்த தற்காலிக பிரச்சனையில் இருந்து விடுபட பல மாற்று வழிகள் உள்ளன. ஏற்கனவே அரசு பல்வேறு விதமான மானிய மற்றும் கடன் சலுகைகளை வழங்கி வருகிறது. அவற்றில் தற்போது பார்க்க இருப்பது 100 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு அளிக்கப்படும் உத்தரவாத திட்டம் பற்றித் தான்.
எவ்வளவு உத்தரவாதம் கொடுக்கப்படும்?
இந்த கடன் உத்தரவாதத்தை நேஷனல் கிரெடிட் குவாரண்டி டிரஸ்டீ கம்பெனி லிமிடெட் (NCGTC) அமைப்பானது வழங்குகிறது. இது எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனில் 60% வரை உத்தரவாத கவரேஜ் வழங்குகிறது. இந்த கடன் உத்தரவாதமானது 100 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு பொருந்தும்.

இந்த திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் கடன் வாங்க அணுகினால், சரியான ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்க தயங்க மாட்டார்கள். ஆக தகுதியான எம்.எஸ்.எம்,இ நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எளிதாக கடன் கிடைக்கும்?
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வங்கிகள் பாதுகாப்பின்றி கடன் வழங்கும் போது கொடுக்கலாமா வேண்டாமா என யோசிக்கலாம். அப்படியே கொடுத்தாலும் அது எளிதாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கிடைத்தாலும் வட்டி அதிகமாக இருக்கலாம். ஆனால் மேற்கண்ட உத்தரவாத திட்டத்தின் கீழ், வங்கிகளுக்கு சற்று பாதுகாப்பு கிடைக்கும். இதனால் எளிதில் கடன் கிடைக்கலாம். இது புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
அரசின் இந்த பரஸ்பர கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், பாதுகாப்பும் கிடைப்பதால் வட்டியும் குறைவாக இருக்க வழிவகுக்கலாம். இது சிறு நிறுவனங்களின் வட்டி செலவையும் குறைக்க உதவும்.
அரசின் தொலைநோக்கு பார்வை!
அரசின் இந்த திட்டமானது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதோடு, நிறுவனங்களின் வருவாயையும் அதிகரிக்க உதவும். தற்போதைய நிலையில் இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தி துறையானது 17% பங்களிக்கிறது. 27.3 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்பினை கொடுக்கிறது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்கை 25% ஆக அதிகரிப்பதை இலக்காக கொண்டுள்ளது.
என்னென்ன தேவை?
எம்எஸ்எம்இ-க்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்கும் இந்த திட்டத்தில் பலன் பெற, தொழில் முனைவோர் உதயம் பதிவு செய்திருக்க வேண்டும். உத்தரவாதத்திற்கு அணுகும் கடன் தொகையானது 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. தொழில் முனைவோர் தங்கள் திட்ட செலவு அதிகமாக இருந்தாலும், அதன் 75% தொகையை உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
வாங்கிய கடன் தொகையானது 50 கோடி ரூபாய்க்குள் இருந்தால், அதை அதிகபட்சமாக 8 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் மற்றொரு ஆறுதல் 2 ஆண்டுகள் தடை காலம் கிடைக்கும். இந்த காலத்தில் கடன் பெறுபவர் அசல் தொகையைச் செலுத்த தேவையில்லை. வட்டியை மட்டும் செலுத்தினால் போதும்.
ஒரு வேளை கடன் தொகையானது 50 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், திருப்பி செலுத்தும் காலம் மற்றும் தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்படலாம். இருப்பினும் கடன் பெறுபவர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரவாதக் கவரேஜுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் தொகையில் 5% முன்பணமாக செலுத்த வேண்டும்.
திட்டத்தின் முக்கியத்துவம்
உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய செலவுகளில் ஒன்று ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான செலவாகும். இந்த செலவை தொழில் முனைவோர் வங்கிகள் மூலம் கடன் வாங்கி கிடைக்கும் நிதியின் மூலம் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்கிறது. சுருக்கமாக, MCGS-MSME திட்டம், உலக அரங்கில் இந்தியா ஒரு முன்னணி உற்பத்தியாளராக உருவாவதற்கு தேவையான நிதி ஆதரவை எம்எஸ்எம்இ-க்களுக்கு வழங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய நேரடியாக உதவுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications