Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோல் மற்றும் காலணி துறையில் MSME-களின் பங்கு என்ன? தமிழ்நாட்டு பங்கு என்ன?

Subscribe to Oneindia Tamil

தோல் மற்றும் காலணித் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியாவில் தோல் மற்றும் காலணி துறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் பெரும்பகுதி, குறிப்பாக விலை குறைந்த மற்றும் நடுத்தர விலையுள்ள பொருட்கள், பெரும்பாலும் இதை எம்எஸ்எம்இ-க்களே உற்பத்தி செய்கின்றன.

என்னென்ன பணிகள்!

தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரிப்பு, காலணி பாகங்கள் தயாரிப்பு, காலணி அசெம்பிளிங் போன்ற நிலைகளின் கீழ் எம்எஸ்எம்இ-க்கள் செயல்படுகின்றன. இதில் மைக்ரோ லெவல் நிறுவனங்கள் மற்றும் கைவினைஞர்கள் குழுக்களின் பங்களிப்பு, காலணிகள் மற்றும் கைப்பைகள் போன்றவற்றின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

MSME

தமிழகத்தின் பங்கு என்ன?

பாரம்பரியமாகவே தோல் பொருட்கள் தயாரிப்பு துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் வழங்கியுள்ளது.

தமிழக அரசானது எம்எஸ்எம்இ-க்களை ஊக்குவிக்கும் விதமாக, முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப ஊக்கத்தொகை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.

வேலைவாய்ப்பில் எவ்வளவு பங்கு?

தோல் மற்றும் காலணித் துறையானது மனித வளத்தை பெரிதும் நம்பியுள்ள தொழில் துறையாகும். ஆக இத்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த துறையில் உள்ள எம்எஸ்எம்இ-க்கள் பெரும்பாலும் கிராமப்புறங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதனால் கிராமப்புறங்கள் மற்றும் டவுன் பகுதிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நிலையான வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் தனித்துவமான தோல் பொருட்கள் உற்பத்தியிலும் எம்எஸ்எம்இ-க்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் மொத்தம் தோல் மற்றும் தோல் பொருட்கள் நிறுவனங்கள், தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. இதில் 85%க்கும் அதிகமானவை அமைப்புசாரா துறையில் அல்லது சிறிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எம்எஸ்எம்இ-க்களின் கீழ் வருகின்றன.

இந்திய அரசு அறிமுகம் செய்த ஃபோகஸ் ப்ராடக்ட் ஸ்கீம் மற்றும் IFLDP போன்ற திட்டத்தின் மூலம், தோல் மற்றும் காலணி துறையில் 22 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்கங்கள் மூலம் எம்எஸ்எம்இ-களிலேயே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பிரிவில் தமிழகத்தை பொறுத்த வரையில் ஏற்கனவே 4 - 5 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் (ஆம்பூர், ராணிப்பேட்டை), சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகியவை தோல் பதப்படுத்துதல் மற்றும் காலணி உற்பத்தியில் முக்கிய மையங்களாக உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் காலணித் துறையில் மட்டும் சுமார் 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதி நிலவரம் எவ்வளவு?

இந்தியாவின் தோல் மற்றும் காலணி ஏற்றுமதி, சர்வதேச சந்தையில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. இது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பிரிவைப் போன்றே முக்கிய பங்கு வகிக்கின்றன. எம்எஸ்எம்இ-க்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாகவோ அல்லது பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு துணை உற்பத்தியாளர்களாகவோ வழங்கி, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்குகளை அடைய உதவுகின்றன.

வேலூர்-ராணிப்பேட்டை-ஆம்பூர்: இந்த முக்கோணப் பகுதி நாட்டின் தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியின் முக்கிய மையமாகும். இங்குள்ள பெரும்பாலான பதப்படுத்துதல் ஆலைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனங்கள் எம்எஸ்எம்இ-களாகும். உயர் ரக ஃபினிஷ் செய்யப்பட்ட தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் சென்னையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எங்கு ஆதிக்கம் அதிகம்?

வேலூர், ராணிப்பேட்டை, மற்றும் ஆம்பூர் தமிழ்நாட்டின் பாரம்பரிய தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கு மிகப்பெரிய மையங்களாகும். குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் (முன்பு வேலூரின் ஒரு பகுதியாக இருந்தது) மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகள், தோல் பதப்படுத்துதல் ஆலைகள் மற்றும் காலணி பாகங்கள் தயாரிக்கும் ஏராளமான எம்எஸ்எம்இ-களைக் கொண்டுள்ளன.

இந்தியாவின் மொத்த தோல் பதப்படுத்தும் திறனில் 60% க்கும் மேல் இங்கு உள்ளது. புதிய தோல் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிப்பதற்கான மெகா கிளஸ்டர்கள் (பனப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம்) இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன

சென்னை நேரடியாகப் பெரிய உற்பத்தி மையமாக இல்லாவிட்டாலும், இது ஃபினிஷ் செய்யப்பட்ட தோல் பொருட்கள் மற்றும் உயர் ரகக் காலணிகளை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய வர்த்தக மையமாகவும், ஏற்றுமதியாளர்களின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. திண்டுக்கல் பகுதி, தோல் அல்லாத காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய எம்எஸ்எம்இ மையமாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கரூர் மற்றும் பெரம்பலூர் போன்ற தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களிலும் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் மற்றும் எம்எஸ்எம்இ-க்கள் நிறுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இன்னும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+