நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள்

Subscribe to Oneindia Tamil

நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள்

 நகைக்கடை அதிபர்

நகைக்கடை அதிபர்

பெரம்பலூர் மாவட்டத்தில், எளம்பலூரில், நள்ளிரவில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை கடை அதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 105 சவரன், 9 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். தப்பிச் செல்லும்போது வீட்டிலிருந்த சொகுசு காரையும் கடத்திச் சென்றுள்ளனர்,

 தனியாக வசிக்கும் நகைக்கடை அதிபர்

தனியாக வசிக்கும் நகைக்கடை அதிபர்

பெரம்பலூர் மாவட்டம்m சங்குப்பேட்டை சர்ச் சாலையில் வசிப்பவர் கருப்பண்ணன்(65), பரமேஸ்வரி (60) என்கிற மனைவியும், ஆனந்த் என்கிற மகணும், ரேணுகா(36), என்கிற மகளும் உள்ளனர். இவர் சொந்தமாக எளம்பலூர் சாலையில் ஆனந்தா ஜுவல்லரி, ரெடிமேட் ஷோரூம் கடைகள் நடத்தி வருகிறார். எளம்பலூர் சாலையில், ஜுவல்லரி வைத்துள்ள கடையின் மாடியிலும் வீடு உள்ளது, இவர், நேற்று இரவு, சங்குப்பேடையின் வீட்டில் தனியாக இருந்தார்.

 நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்

நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்

மனைவியும், மகளும் நகை கடை மாடி வீட்டில் இருந்துள்ளனர், மகன் ஆனந்த், திருச்சி சென்றிருந்தார். இந்த நிலையில், இரவில், கதவை மூடாமல் வீட்டினுள் கருப்பண்ணன் இருந்துள்ளார். அப்போது சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களைப்பார்த்து கருப்பண்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

 நகைக்கொள்ளை

நகைக்கொள்ளை

அவர்கள் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, பீரோ சாவியை பிடுங்கியுள்ளனர். சாவியைப் பிடுங்கி பீரோவைத் திறந்து பீரோவிலிருந்து , 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 105 சவரன் நகைகள், 9 கிலோ வெள்ளி, லட்சக்கணக்கில் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

 சொகுசு காரும் கடத்தல்

சொகுசு காரும் கடத்தல்

தப்பிச் செல்லும்போது வீட்டு வாசலில், சாவியுடன் இருந்த ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட சொகுசு காரையும் கடத்திச் சென்றனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றது குறித்து கருப்பண்ணன் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

 கொள்ளையா? நாடகமா? விசாரிக்கும் போலீஸார்

கொள்ளையா? நாடகமா? விசாரிக்கும் போலீஸார்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பந்தமாக மாவட்ட எஸ்பி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட காரை தேடி வருகின்றனர், கருப்பண்ணன் வீட்டில், சிசிடிவி கேமிரா இருந்தாலும் அது பழுதாகி இருப்பதால் கொள்ளையர்கள் வந்துபோனது பதிவாகவில்லை. இதனால், கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது, கொள்ளை சம்பவம் நடந்தது உண்மையா அல்லது நாடகமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+