For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

Google Oneindia Tamil News

காக்கிநாடா: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊருவிய இலங்கையை சேர்ந்த 11 மீனவர்களை இந்திய கடற்படை செய்தது. இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டி இதுவரை 800 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை தாக்குதலால் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

தகாத உறவு விபரீதம்.. கணவனை தோசைக் கல்லால் கொலை செய்த மனைவி.. 2 ஆண்டு தலைமறைவுக்கு பின் சிக்கிய ஜோடி! தகாத உறவு விபரீதம்.. கணவனை தோசைக் கல்லால் கொலை செய்த மனைவி.. 2 ஆண்டு தலைமறைவுக்கு பின் சிக்கிய ஜோடி!

இலங்கை அட்டூழியம்

இலங்கை அட்டூழியம்

இலங்கையின் இந்த 40 ஆண்டுகால அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டுவர இயலவில்லை. இலங்கை கடற்படை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டிக்கவும் இல்லை என்பது தமிழகத்தின் கவலை.

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது

ஆகையால் இலங்கையின் இந்த அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் நிலைப்பாடு. அண்மையில் கூட 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்தது. இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆந்திராவுக்குள் ஊடுருவல்

ஆந்திராவுக்குள் ஊடுருவல்

இந்நிலையில் ஆந்திரா மாநில கடற்பரப்புக்குள் இலங்கை மீனவர்கள் அத்துமீறி ஊடுருவினர். சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இந்த படகு குறித்து கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா கடற்பரப்பில் நுழைந்த சந்தேகத்துக்குரிய 2 படகுகள் சுற்றி வளைக்கப்பட்டன. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கிய 2 படகுகளில் 11 மீனவர்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது. இதனையடுத்து 2 படகுகளில் இருந்த 11 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை செய்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

இதன்பின்னர் 11 பேரும் காக்கிநாடா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் தாங்கள் எல்லை தாண்டி ஊடுருவவில்லை; காற்றின் வேகம் காரணமாக எல்லை கடந்துவிட்டோம் என பல்லவியை பாடி இருக்கின்றனர் இலங்கை மீனவர்கள். தற்போது அவர்களிடம் இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த 11 பேரும் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

English summary
11 srilankan fishermen arrested in Andhra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X