
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை: முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்:
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிகப்படுத்தவுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஆந்திராவின் தென்மாவட்டங்களில் முதலாவதாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் செலவாகும் என்றாலும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும். ஆந்திராவில் சுமார் 70 சதவீதம் பேர் ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே ஆந்திரம் முன்னணியில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு ஊழியர்கள் மூலம் கிராமப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் இன்டர்நெட்டின் பயனை அறிந்து கொள்ளும் வகையில் இன்டர்நெட் இணைப்புக்களைக் கொடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தனியார் சாப்ட்வேர் நிறுவனங்கள் உதவுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன என்றார் சந்திரபாபு.
யு.என்.ஐ.