வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வளர்ப்பு மகன் சுதாகரன் எனது வீட்டுக்கே வரவில்லை - பத்திரிகை செய்திகளுக்கு ஜெயலலிதா மறுப்பு
சென்னை:
எனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றப்பட்ட முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மீண்டும் எனது வீட்டுக்கு வந்து செல்கிறார் என்றும், அதிமுகவில் சேர அவர் விரும்புவதாகவும் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எனது வீட்டுக்கு சுதாகாரன் அடிக்கடி வந்து செல்வதாக சில பத்திரிகைளில் செய்தி வந்துள்ளது.மேலும், அதிமுகவில் சேர அவர் முயற்சி செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளன. இச் செய்திகள் முழுவதும் அடிப்படை ஆதாரமில்லாதது.
சுதாகரன் நற்பணி மன்றம் பெயரில் அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சுதாகரன் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் சுதாகரன் பெயரில் நடைபெற்று வரும் நற்பணி மன்றங்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
சின்ன எம்ஜிஆர் என்று தனது தொண்டர்களால் அழைக்கப்படும் சுதாகாரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர். இவரை தனது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்ட ஜெயலலிதா, தான் முதல்வராக இருந்தபோது சுதாகரனுக்கு பெரிய அளவில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக, சுதாகரனை தனது வளர்ப்பு மகன் இல்லை என்று கூறிய ஜெயலலிதா தனது வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.
யு.என்.ஐ.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications