தமிழகத்தில் இன்று
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று புத்த மத துறவிகள் கேட்டுக் கொண்டுள்ள நிலையில்,இலங்கைக்கான இந்தியத் தூதர் சிவசங்கர் மேனன் டெல்லி விரைந்துள்ளார்.
யானை இறவு மற்றும் பலாலி ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் பிடித்துள்ளனர். இலங்கை ராணுவம் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் வலுத்துள்ளது. இதன் உச்சகட்டமாக புத்த மததுறவிகள் குழு இந்தியத் தூதர் சிவசங்கர் மேனனை திங்கள்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேசியது.
விடுதலைப் புலிகளை ஒடுக்க இந்தியாவின் உதவியை நாடுவதில் தவறில்லை என்ற இலங்கை மக்களின் கருத்தை அவர்கள் மேனனிடம் தெரிவித்தனர். புத்தமத துறவிகள் சங்கத் தலைவர் மதுலுவாவே சோபிதா நாயகா தேரா கூறுகையில், விடுதலைப் புலிகளை ஒடுக்குவது இயலாத காரியம் என்று இலங்கைஅரசு கருதினால், இந்தியா கடற்படை மற்றும் விமானப்படை, ராணுவத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் இந்தியா உதவ வேண்டும். இந்தியா உதவும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகளின் உதவியைக் கோர இலங்கை தயங்கக் கூடாது என்றுஎதிர்க்கட்சிகளின் முக்கிய செய்தித்தாளான தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், முதலில் இந்தியாவுக்கு, இலங்கை உதவி கேட்டு கோரிக்கை விடுக்க வேண்டும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு அக்கறை உண்டு.எனவே நமது கோரிக்கை குறித்து நிச்சயம் பரிசீலிக்கும். அந்நாட்டின் தெற்கு எல்லையில் என்ன நடக்கிறது என்ற அக்கறை உணர்வு இந்தியாவுக்குநிச்சயம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளுக்கான எதிரான நடவடிக்கை குறித்து, இந்தியா, இதர தெற்காசிய நாடுகள், சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் உதவியையும்இலங்கை கோர வேண்டும் என்று புத்த துறவிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications