தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்த பாகிஸ்தான் விருப்பம்

இஸ்லாமாபாத்:

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர்வாஜ்பாயியுடன் பேச்சு நடத்த விரும்புவதாக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாள்பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளிநாட்டுத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

காஷ்மீர் பிரச்சினை உள்பட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயானஅனைத்துப் பொதுப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது.

இந்தியப் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும்இடையேயான பல பிரச்சினைகளால், இரு நாடுகளும் குறுகிய காலத்துக்குள் 3 முறைபோரைச் சந்திக்க நேரிட்டது.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்ற கட்டுப்பாட்டைஇந்தியா தளர்த்திக் கொள்ளவேண்டும் என்றார் முஷாரஃப்.

முஷாரப்ஃபின் இந்த அழைப்பு இரு நாட்டுக்கும் இடையேயான பிரச்சினைகள்தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பலம் சேர்க்கும் என்று அந் நாட்டு அரசு செய்தித்தொடர்பாளர் தாரிக் அல்டாஃப் தெரிவித்தார்.

பேச்சு வார்த்தை தொடர்பாக, இந்தியாவின் நிலையில் சற்றும் மாறுதல்ஏற்படவேண்டும். அதுதான் இரு நாட்டுக்கும் நல்லது. காஷ்மீர் உள்பட அனைத்துபிரச்சினைகளையும் பேசித் தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்கேற்ப இந்தியாவும்சிலவற்றை விட்டுக் கொடுத்து பேச்சு நடத்தவேண்டும் என்றார் அல்டாஃப்.

பாகிஸ்தானின் அதிபர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தியப் பிரதமருடன்பேச்சு நடந்த முஷாரஃப் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுடன் எந்த நேரத்திலும்,எந்த நிலையிலும் பேச்சு நடத்தத் தயார் என்று அவர் அறிவித்துள்ளது மிகவும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+