தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வரும் நார்வே நாட்டின் தூதர் வியாழக்கிழமை இந்தியாவருகிறார். இதன் மூலம் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
விடுதலைப் புலிகள், இலங்கை அரசுக்கு இடையே நார்வே மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகிறது. இருதரப்பினரையும் அமைதிப் பேச்சு நடத்த நார்வே வரும்படி அழைத்தது. இது தொடர்பாக இலங்கை அரசுடனும்,விடுதலைப் புலிகளுடனும் நார்வே நாட்டு அமைதித் தூதர் அரிக் சொலேய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்போது இலங்கையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில் நார்வேஅமைதித் தூதர் அரிக் டெல்லி வருகிறார். இது குறித்து இந்திய வெளியறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்கூறுகையில், வட இலங்கையில் போர் முற்றியுள்ளதையடுத்து அது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாகஅரிக் கோரினார். இதைத் தொடர்ந்து அவரை டெல்லி வருமாறு அழைத்துள்ளோம் என்றார்.
அவர் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளுடன் முழு அளவில் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.அவர் நார்வேயில் எம்.பியாக உள்ளார்.
அவருடன் இலங்கைக்கான நார்வே நாட்டு தூதரும் டெல்லி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே இந்தியா மத்தியஸ்தம் செய்து வைக்கும்முயற்சிகளில் இறங்கும். இந்தப் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண நார்வே மேற்கொண்ட முயற்சிகள்பலனளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.