தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஊட்டி மலர்க் கண்காட்சிக்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு

கோவை:

ஊட்டியில் மலர்க் கண்காட்சி நடத்தக் கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு உச்சிகவுடர் தலைமை வகித்தார். இதில் பசுந்தேயிலைக்கு உடனடியாக அரசு விலை அறிவிக்க வேண்டும்.பசுந்தேயிலை பறிப்பதை வரும் 15ம் தேதி முதல் நிறுத்தி வைக்க வேண்டும். மலர்க்கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அரசு மலர்க்கண்காட்சி நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சிவசங்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலியிடங்களை நிரப்பக் கோரியும், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற