For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
தேயிலை விலையில் வீழ்ச்சி
ஊட்டி:
குன்னூரில் வெள்ளிக்கிழமை தேயிலை ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. நீலகிரியில் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதனையொட்டிவழக்கமாக நடக்கும் தேயிலை ஏலம் நடைபெறவில்லை.
தமிழகம் மற்றும் கேரளாவில் குன்னூர், கோவை, கொச்சி, ஆகிய இடங்களில் மட்டுமே தேயிலை ஏலம் நடைபெற்று வருகிறது. தேயிலை பிரச்சனைதொடர்பாக குன்னூரில் வெள்ளிக்கிழமை ஏலம் நடக்கவில்லை.
இதனால் தேயிலை விற்பனை நடைபெறாததால் மேலும் அதிக அளவு தேயிலை இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விலை மேலும் வீழ்ச்சியடையவாய்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் ஊட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த ஜே.எல்.எஸ்.பள்ளி விழாவில் கலந்து கொண்ட மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸிடம்,ராணுவத்திற்கு தேவையான தேயிலையை நீலகிரியில் கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Comments
Story first published: Saturday, May 13, 2000, 5:30 [IST]