For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செயலை விட அதன் பயனை நேசித்தால்!

By Staff
Google Oneindia Tamil News
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் வருகையில் பாதிப்பில்லை

ராமேஸ்வரம்:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடுமையாக நடந்து வரும் போர் காரணமாக ராமேஸ்வரத்திற்கு அதிகளவில்அகதிகள் வந்தாலும் கூட, ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பில்லை.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் ராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டுள்ளனர். இதனால்ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிஎதுவும் நடக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அவிதா பார்சி என்ற மகாராஷ்டிர மாநில சுற்றுலாப் பயணி, மரத்வாடா என்ற பகுதியிலிருந்து மிகுந்த சிரமத்திற்கிடையே, ராமேஸ்வரத்திற்குப் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இவருக்கு ஒரு கை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அவிதாவுக்கும், அவருடன் வந்துள்ளவர்களுக்கும், இலங்கையில் நடக்கும் சண்டை குறித்துத் தெரியவில்லை. அவிதாவைப் பொருத்தவரை, ராவணனால்கடத்திச் செல்லப்பட்ட சீதாவை மீட்க ராமேஸ்வரத்திலிருந்துதான் ராமர் தனது போரைத் தொடங்கினார் என்பது மட்டுமே தெரியும்.

ராமேஸ்வரத்திலுள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி துரைசுவாமி நாடார் கூறுகையில், ராமேஸ்வரம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும்,இந்திய மக்கள் இதை புனித நகரமாகக் கருதுவதாலும் தினசரி ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

உ.பி.யிலுளள வாரணாசிக்கு அடுத்து ராமேஸ்வரம் இந்திய யாத்ரீகர்களின் தீர்த்தயாத்திரை நகரமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ராமேஸ்வரத்திற்கு 30லட்சம் யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். காசியைப் போல, இங்கு வந்து தீட்சை பெறுவோர் பலர்.

ராமேஸ்வரத்திலுள்ள சிவன் சிலையை, ராமரும், சீதாவும் சேர்ந்து மண்ணிலிருந்து வடித்தார்கள் என்பது புராணம். சிலையை சீதாதேவி நிர்மாணித்தார் என்றும்வரலாறு உள்ளது. இதன் காரணமாகவே, வட இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர் என்றார்துரைசுவாமி நாடார்.

தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தார்வார் என்ற பகுதியைச்சேர்ந்த கரும்புத் தோட்டத் தொழிலாளி சுரேஷ் ராதி கூறுகையில், ஐந்தாவது முறையாக ராமேஸ்வரம் வருவதாகக் குறிப்பிட்டார். எங்களதுகிராமத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக ராமேஸ்வரம் வந்து கொண்டுள்ளனர். எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ராமேஸ்வரம் வருவதைதவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்.

மண்டபத்திலிருந்து, ராமேஸ்வரம் தீ விற்குச் செல்வதற்கு கடல் வழியாக 1.5 கிலோமீட்டர் நீளமுடைய பாலம் உள்ளது. இப்பாலம் வருவதற்கு முன்புரயில் மார்க்கம் மூலம் மட்டுமே ராமேஸ்வரம் செல்ல முடியும். சாலை வசதி வந்துவிட்டதால் யாத்ரீகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

ராமேஸ்வரம் கோவிலுக்கு, நுழைவு டிக்கெட் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 3 கோடி வருமானம் கிடைக்கிறது. இதுதவிர, பக்தர்களின் சிறப்புபூஜைகள் மற்றும் பிற கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம் தனி.

கோவில் வளாகத்தில் மொத்தம் 21 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. இவற்றில் நீராடிச் சென்றால் நல்லது என்பது ஐதீகம். கோவிலின் கர்ப்பக்கிரகம்இலங்கை மன்னன் பராக்கிரம பஹு என்பவனால் கட்டப்பட்டதாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது. இந்த மன்னன் 12-வது நூற்றாண்டைச்சேர்ந்தவன்.

மொத்தத்தில், யாழ்ப்பாணப் போரால் அதன் பக்கத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு எந்தப் பாதிப்பும்ஏற்படவில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X