தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரமாதமாக சண்டை போடுகிறார் - பிரபாகரனுக்கு இலங்கை அமைச்சர் "ஷொட்டு

கொழும்பு:

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போர்க்களத்தில் மிகப் பிரமாதமாக சண்டை போடுகிறார் என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் பாராட்டியுள்ளார்.

கொழும்பில் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தைப் பிடித்தே தீருவோம் என்ற ஆவேசத்தில் விடுதலைப்புலிகள்தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களது தலைவர் பிரபாகரன் மிகப்பிரமாதமாய் சண்டைபோடுகிறார். அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.

கடந்த மூன்று தினங்களாக விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் கடும் போராட்டத்தில்ஈடுபட்டு வருகிறார்கள். அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அவர்களும் எங்களுடன் ஒத்துழைக்கவேண்டும். கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் கடும் மோதல்கள்தொடர்ந்து நடந்து வருகின்றன.

தற்போது போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இப்போதாவது அவர்கள் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற