தமிழகத்தில் இன்று
டெல்லி:
கே-ர-ள-தமி-ழ-க எல்-லை-யில் உள்-ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாகஆராய நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேரள மற்றும் தமிழகமுதல்வர்கள் பேச்சுவார்த்தையில் இம் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
கேரளம் மற்றும் தமிழ்நாடு இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக, தமிழகமுதல்வர் கருணாநிதிக்கும், கேரள முதல்வர் ஈ.கே. நாயனாருக்கும் இடையே டெல்லியில் வெள்ளிக்கிழமைபேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தாக்கூர் தலைமை தாங்கினார்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்த்துக் கொள்ளும்படிஉச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இரு மாநில முதல்வர்களும் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர்.அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து ஆராய நிபுணர்அமைக்கலாம் என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்த யோசனையை இரு முதல் அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு மத்திய அமைச்சர் தாக்கூர் கூறியதாவது:
அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள குறித்து ஆராய அடுத்த ஒருவாரத்தில் நிபுணர் குழு அமைக்கப்படும். அதற்கு முன்னதாக நிபுணர் குழு உச்சநீதிமன்றத்துக்குத் தகவல்தெரிவிக்கப்படும். இக் கமிட்டிக்கு மத்திய நீதி ஆணையப் பொறியாளர் தலைவராக இருப்பார்.
இக் குழுவில் இரு மாநிலங்களையும் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள், மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் எனமொத்தம் 15 பேர் இருப்பர். நிபுணர் குழு தனது ஆய்வை முடித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.ஆய்வுக்கான காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை. அது குறித்து நிபுணர் குழுவே முடிவு செய்யும் என்றார்தாக்கூர்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும் இடையேசமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் வியாழக்கிழமை கூட்டப்பட்ட காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தைக் கர்நாடகம் புறக்கணித்தது.இதனால், அக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அக் கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி சென்ற கேரளமுதல்வரும், தமிழக முதல்வரும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து பேச முடிவு செய்தனர்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications