கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கலர் டிவி ஊழல் வழக்கில் 30ம்தேதி தீர்ப்புகூறப்படுகிறது.
அன்றைய தினம் ஜெயலலிதா. சசிகலா உள்ளிட்ட 11 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமைஉத்தரவிட்டார்.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து தீர்ப்புகூறப்போகும் இரண்டாவது வழக்கு இது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வழங்கும் திட்டம்செயல்படுத்தப்பட்டது. அதற்காக 45 ஆயிரத்து 302 கலர் டிவிக்கள் வாங்கப்பட்டன.அதில் 10 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜெயலலலிதா,சசிகலா, முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, சத்தியமூர்த்தி, ஐஏஎஸ் அதிகாரிகள்அரிபாஸ்கர். எச்.எம்.பாண்டே உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ராதாகிருஷ்ணன்முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 24ம் தேதி வக்கீல்கள் வாதம்துவங்கியது. அரசு தரப்பில் அளித்த பதிலுடன் வக்கீல்கள் வாதம் திங்கள்கிழமைமுடிவடைந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 30ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்றும் அன்றையதினம் எல்லா குற்றவாளிகளும் ஆஜராக வேண்டும் என்றும் திங்கள்கிழமை நீதிபதிராதாகிருஷணன் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் 20.10.97 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14.5.98அன்று குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை 28.12.98 அன்றுதுவங்கியது. 2.3.2000 அன்று சாட்சிகள் விசாரணை முடிந்தது.
அரசு தரப்பில் 80 சாட்சிகளும், எதிர் தரப்பில் 3 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.15.3.2000 அன்று சசிகலாவும், 25.3.2000 அன்று ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில்வாக்குமூலம் அளித்தனர்.
இவ்வழக்கில் மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனும் குற்றவாளியாக முதலில்சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவரை நீக்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications