கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
சுவா:
ஆயுதப் புரட்சியையடுத்து தலைநகர் சுவாவில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சூறையாடல்களால் ஏற்பட்ட பாதிப்பை புரட்சிக்காரர்களின் தலைவரும்,தன்னைத் தானே பிரதரமாக அறிவித்துக் கொண்டுள்ளவருமான ஜார்ஜ் ஸ்பீட் திங்கள்கிழமை நேரடியாகப் பார்த்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆயுதம் தாங்கிய நபர்களுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்த ஸ்பீட், பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலஎம்.பிக்களை சிறை வைத்தார். ஆட்சியையும் பிடித்து விட்டதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லை.
புரட்சியையடுத்து தலைநகர் சுவாவில் வன்முறை மூண்டது. பல இடங்களில் கலகக்காரர்கள் சூறையாடலில் இறங்கினர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த ஸ்பீட், அங்கு குழுமியிருந்த 30 பேர் கொண்ட பிஜி தேசியவாதக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். பிஜிஇனத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்காகவே ஆட்சியைப் பிடித்ததாக அவர் அப்போது தெரிவித்தார்.
அதன் பின்னர் போலீஸ் கார் ஒன்றில் அவர் கிளம்பினார். காரில் அவரது புரட்சிப் படையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபரும், ஒரு போலீஸ் அதிகாரியும்மட்டுமே இருந்தனர். 45 நிமிடங்களுக்கு தலைநகர் சுவாவை அவர் சுற்றிப் பார்த்தார் என்று பிஜி ரேடியா தெரிவித்தது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த ஸ்பீட்டைக் கைது செய்ய போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிஜி ரேடியோ தெரிவித்தது.
புரட்சிக்காரர்களின் பிடியில் இன்னும் 15 பேர் உள்ளனர். இதுவரை 30 பேரை அவர் விடுவித்துள்ளார். பிரதமர், அதிபரின் மகள் ஆகியோர் பிடியில்உள்ளவர்களில் முக்கியமானவர்கள்.
போலீஸும், ராணுவமும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications