தமிழகத்தில் இன்று
சென்னை:
தேர்வுக்குரிய வினாத்தாள் கொடுக்கப்படாமல் அடுத்து நடக்க இருக்கும்,தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் சட்டக் கல்லூரிமாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால், சனிக்கிழமை நடந்த தேர்வு மீண்டும் ஜூன் 16 -ம் தேதி நடத்தப்படும் என்றும், வரும் 30 -ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜூன் 19 -ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார்.
இது பற்றி , சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறியதாவது.
தற்பொழுது தமிழகத்தில் உள்ள 5 சட்டக்கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகம்பொறுப்பேற்று நடத்துகிறது.
ஐந்தாண்டு சட்டப்பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான பேமிலி லா முதல் தாளுக்கான (குடும்பச்சட்டம்) தேர்வு நேற்றுநடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பேமிலி முதல் தாள் பாடத்துக்காக படித்துவிட்டு தேர்வு மையத்துக்கு வந்தனர்.
தேர்வு மையத்தில் மே 30 -ம் தேதி நடக்கவுள்ள பேமிலி லா இரண்டாம் தாளுக்குரிய வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதை சில மாணவர்கள் தேர்வுமேற்பார்வை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ஒருசில தேர்வு மேற்பார்வைஅதிகாரிகள் உங்கள் பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட்டோம்,அவர்கள் யோசித்து முடிவு எடுக்கும் வரை நீங்கள் இந்தவினாத்தாளுக்கு விடையளிக்க முயற்சியுங்கள் என்று கூறினர்.
பிறகு ஒரு மணி நேரம்கழித்து மற்றொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டது . அந்த வினாத்தாளிலும்பேமிலி லா இரண்டாம் தாளுக்குரிய வினாக்களேஇருந்தது. மேலும் நேரம் நீட்டிக்கவில்லை. இதனால் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை.பெயிலாகி விடுவோமோ என்று பயமாக உள்ளது. பல்கலைக்கழகத்தினரின் அலட்சியப்போக்கு கண்டிக்கத்தக்கது என்று கூறினார்கள் மாணவர்கள்.
இது பற்றி, சட்டப்பல்கலைகழகத்தின் தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரிகள் தரப்பிலிருந்து பேமிலி லா முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் வினாத்தாளில்அச்சடிக்கப்பட்ட ரோமன் லெட்டர்கள் மாற்றி அச்சடிக்கப்பட்டதால் தான் இத்தனை குழப்பங்களும் என்கிறார்கள்.