For Daily Alerts
Just In

தமிழகத்தில் இன்று
பிஜி அதிபர் ராஜினாமா
சுவா:
பிஜி அதிபர் சர் கமீசே மாரா, திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ராணுவச் சட்டம் அமல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக அதிபர் ராஜினாமா செய்து விட்டார்.
மாராவின் செயலாளர் பிரெளன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ராணுவம் ஆட்சியைப் பிடிப்பதற்காக செய்தி வெளியாவதற்கு சில மணிநேரம் முன்பே தனது அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு அதிபர் மாரா சென்று விட்டார்.
தற்போது மாரா பத்திரமான இடத்தில் உள்ளார். மகிழ்ச்சியுடனேதான் தனது பதவியை மாரா ராஜினாமா செய்துள்ளார் என்றார் அவர்.
ராய்ட்டர்ஸ்.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]