தமிழகத்தில் இன்று
ஜெ.கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாது: திரு-நா-வுக்-க-ர--சு சொல்-கி-றார்
சென்னை:
ஜெயலலிதாவால் தனித்து மட்டுமல்ல, கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாது என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்றஉறுப்பினருமான திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
இலங்கை பிரச்னையில் தேச நலனே முக்கியம். தேச நலன் கருதியும், தமிழக நலம் கருதியும், பிரதமர் வாஜ்பாய் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர்சேர்ந்து எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைந்தால் மகிழ்ச்சியே. இலங்கை பிரச்னையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கலாம். இதனால் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே இப்பிரச்னையில் கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசித்து தான் பிரதமர் முடிவெடுத்தார். அதே நிலைதொடரும் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக - திமுக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்கினார்கள். சட்டமன்றத் தேர்தலில் குறைந்த அளவு தொகுதிகளை பெறுவதற்கு நாங்கள் பலமில்லாதகட்சி அல்ல.
அதிமுகவில் ஜெயலலிதா களை எடுக்கிறாரா அல்லது பயிர்களை பறிக்கிறாரா என்பது தேர்தலின் போது தான் தெரியும். வழக்குகளில் சிக்கிஜெயலலிதாவால் தேர்தலில் நிற்க முடிந்தாலும் சரி நிற்க முடியாவிட்டாலும் சரி. இனிமேலும் ஜெயலலிதாவை நம்ப மக்கள் தயாரில்லை.
1996ம் ஆண்டு எந்த குடும்பத்தால் தனது ஆட்சி நாசமானது என்று கூறினாரோ அதே குடும்பத்தை நம்பி தற்போது கட்சி நடத்துகிறார். இதனால்எம்.ஜி.ஆர். விசுவாசிகள் மட்டுமல்ல, ஜெயலலிதா விசுவாசிகள் கூட அதிமுகவில் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே ஜெயலலிதாவால் அடுத்த தேர்தலில் தனித்து மட்டுமல்ல, கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாது என்றார் திருநாவுக்கரசு.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications