For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜெ. ஆ-ட்-சி -ஊ-ழல்களும்..---தா-ட-ரும் வழக்-கு-க-ளும்

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா,சசிகலா மற்றும் முன்னாள் மந்திரிகள் மீது 46 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன.

இவற்றை வேகமாக முடிப்பதற்காக 1997 மே மாதம் 3 தனி கோர்ட்டுகள்அமைக்கப்பட்டன. 3 கோர்டுகளுக்கு 46 வழக்குகளும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.இதில் 1 -வது தனிக் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சம்பந்தம் முன் 8 வழக்குகளில்குற்ற்ப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்,அவரது மனைவி நூர் ஜமீலா மீது 33 லட்ச ரூபாய்மதிப்புள்ள சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் முதன் முதலாக தீர்ப்பு கூறப்பட்டது.அவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தற்பொழுதுஇவர்கள் உ.யர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீனில் உள்ளனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்பசாகரன், வருமானத்தை மீறி,58 லட்ச ரூபாய் மதிப்புக்குசொத்து குவித்த வழக்கில் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

புவனகிரி தொகுதி அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ மல்லிகா வருமானத்திற்குஅதிகமாக 2 கோடியே 36லட்சம் ரூபாய் மதிப்புக்கு சொத்து குவித்த வழக்கில்மல்லிகாவுக்கும் , அவரது அண்ணன் செல்வராஜூக்கும் தலா ஏழு வருடம்கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டசெல்வராஜின் மனைவி மணிமேகலைக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும்கிடைத்தது. இவர்களும் அப்பீல் செய்து ஜாமீனில் உள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, அவரது மனைவி சகுந்தலா மகன்கள்அறிவழகன், மணிமாறன் ஆகியோர் மீது 48லட்சம் ரூபாய் மதிப்பு சொத்து குவிப்புவழக்கில் சகுந்தலா மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்களுக்குஇருப்பத்தைந்து மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மதுசூதனன், தமிழ்நாடு ஜவுளிக் கழக முன்னாள் இயக்குனர்ஆர்.நரசிம்மலு தொழிலதிபர்கள் செல்வராஜ், அரவிந்தகுமார், ஆர்.ஷா, மானேஜர்முத்துசாமி, டிரைவர் ஜோசப் மீதான ரூபாய் 61 கோடி இலவச சேலை வேட்டி ஊழல்வழக்கில் மதுசூதனனுக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனையும், தொழிலதிபர்கள்செல்வராஜ், அரவிந்த குமார், ஆர்.ஷா ஆகியோருக்கு 4 வருடம் சிறைத்தண்டனையும்ரூபாய் 1.25 லட்சம் அபராதமும் அதிகபட்சமாக விவாதிக்கப்பட்டது. இவர்களும்ஐகோர்ட்டில் அப்பீல் செய்து ஜாமீனில் உள்ளனர். டிரைவர் ஜோசப் மட்டும் விடுதலைசெய்யப்பட்டார்.

ஐந்து வழக்குகளில் அதிரடி தீர்ப்பு கூறிய நீதிபதி எஸ்.சம்பந்தம் ஒய்வு பெற்றதும் அந்தகோர்டு நீதிபதியாக ஏ.சி. ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் பொறுப்பு ஏற்றுவிசாரணையை நடத்தி வருகிறார்.

சேடப்பட்டி முத்தையா வழக்கின் போது, கர்ப்பிணியாக இருந்த அவரது மகள்மலர்விழி மீதான வழக்கு தனியாக பி-ரிக்கப்பட்டு இருந்தது. அதை ஏ.சி. ஆறுமுகப்பெருமாள்ஆதித்தன் விசாரித்து மலர்விழிக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

இதே போல், மது சூதனன் வழக்கிலும்.தனியாக பிரிக்கப்பட்ட அவரது அக்கா மகன்ஜெயபிரகாஷ் மீதான வழக்கை விசாரித்து அவருக்கு நான்கு மாதம் கடுங்காவல்சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஆதித்தன் தீர்ப்பு கூறினார்.

ஜெயலலிதா .சசிகலா,சுதாகரன், இளவரசி மீதான 66.65 கோடி வருமானத்தை மீறியசொத்து குவிப்பு வழக்கு. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான ரூ 2 கோடி ,ஜீவா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்.எம். பாண்டேமீதான ஒரு கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கு , முன்னாள் டி.ஜி.பிக்கள்ஹரிஹரன், வீரராகவன் மீதான ஒருகோடி ரூபாய் தீயணைப்பு கருவி ஊழல் வழக்கு,ஆகியவை மீது விசாரணை நடந்து வருகிறது.

இதே கோர்ட்டில் ஜெயலலிதா மீது சி.பி.ஐ தொடர்ந்துள்ள ஒரு வழக்கு, ஜெயலலிதா,முன்னாள் அமைச்சர் சின்னசாமி, ஐ,ஏ.எஸ் அதிகாரி தியானேஸ்வரன் ஆகியோர்மீதான 75 கோடி ரூபாய் கிரானைட் ஊழல் வழக்கு உள்பட 8 வழக்குகள்எப்.ஐ,ஆர்.நிலையிலேயே உள்ளன.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தற்பொழுது நூற்றி ஐம்பது சாட்சிகள் வரைவிசாரிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் நூறு கோடி தங்க வைர நகைகள்,முப்பத்தைந்து லட்சம் மதிப்புள்ள சொகுசு பஸ் ஆகியவை கோர்ட்டுக்கேகொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி அதிகாரிகள் சாட்சி சொன்னார்கள்

அவை மீண்டும் எதிர்தரப்பு குறுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட உள்ளன.இந்தவழக்கை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரியான லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸ்சூப்பிரண்டட் நல்லம்மா நாயுடு முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.

இதே போல் செங்கோட்டையன் மீதான ஜீவா போக்குவரத்து கழக ஊழல் வழக்கிலும்அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிவுக் கட்டத்தை தொட்டுள்ளது. மற்ற இரண்டுவழக்குகளும் வேகமாக நடந்து வருகிறது.

(இது முதலாவது தனி கோர்ட்டில் உள்ள வழக்குகளின் நிலை. இன்னும் இரண்டாவதுதனி கோர்ட்டில் உள்ள வழக்குகளின் நிலை என்ன? அது அடுத்த வாரம்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X