தமிழகத்தில் இன்று
டாக்சி ஓட்ட வரும் துபாய் பெண்கள்
துபாய்:
அரபு நாடுகளிலேயே முதல் முறையாக துபாயில் பெண் டிரைவர்கள் டாக்சிகளை இயக்கவுள்ளனர்.
அரபு நாடுகளில் பெண்கள் பொது இடங்களில் பணி புரிவது வழக்கம் இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக துபாயில் பெண் டிரைவர்கள் டாக்சிகளைஇயக்கவுள்ளனர்.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் பெண் டாக்சி டிரைவர்கள் களத்தில் இறங்கவுள்ளனர். பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இந்தடாக்சிகளில் பயணிக்கலாம்.
மொத்தம் ஏழு பெண் டிரைவர்கள் துபாயின் முதலாவது பெண் டாக்சி டிரைவர்கள் என்ற பெருமையைப் பெறவுள்ளனர். இவர்கள் அனைவரும் அரேபியப்பெண்கள்.
துபாய் போக்குவரத்துக் கழகம் இந்த டாக்சி சேவையை அறிமுகப்படுத்துகிறது. அரபு நாட்டு வழக்கப்படி நீண்ட கவுனும், முகத்தைத் தவிர பிற பகுதிகளைஆடைகளால் முடியும் இந்தப் பெண் டிரைவர்கள் உடை அணிந்திருப்பார்கள்.
இந்தப் பெண் டிரைவர்களுக்குப் பாதுகாப்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருப்பார். அவருக்கு துபாய் போலீஸ் முழு அதிகாரமும் வழங்கியுள்ளது. இந்த புதியமுறை வெற்றி பெற்றார், மேலும் 23 பெண் டாக்சி டிரைவர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று துபாய் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
புதிய பணி குறித்து பெண் டாக்சி டிரைவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அப்லா ஹுசைன் என்ற பெண் டிரைவர் கூறுகையில், டிரைவராக சேருவதற்கு நான்விண்ணப்பித்தபோது, எனது சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த நான் கடுமையாக போராடவேண்டியதாயிற்று.
டிரைவராக மாறுவதன் மூலம் எனது பாரம்பரியத்தை மீறுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அதுபோலவே பலரும் நினைப்பதால்தான் தவறாகத்தோன்றுகிறது என்றார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த மற்றொரு டிரைவரான எஹசான் ஹுசைன் கூறுகையில், பெண்கள் விமானங்களை செலுத்தும்போது, டாக்சியை மட்டும் ஏன்ஓட்டக் கூடாது. எங்களுக்கு மூன்று மாதம் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயணிகளுடன் எப்படிப் பழகுவது, அவர்களை எப்படி புரிந்து கொள்வது என்பதுகுறித்து எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போலவே, அரபு நாட்டுப் பெண்களும் இப்போது ஆண் ஆதிக்கம் உள்ள துறைகளில் நுழைந்துள்ளோம் என்றார்.
29 வயதாகும் சிரியாவைச் சேர்ந்த ஜமீலா பாஷா கூறுகையில், எனது கணவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதால் இந்தப் பணிக்கு வந்தேன்.எங்களுக்கு எந்த சலுகையையும் துபாய் போக்குவரத்துக் கழகம் தர வேண்டாம். பிற ஊழியர்களுக்கு வழங்கும் மரியாதை, சலுகைகளைக்கொடுத்தால் போதும் என்றார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications