தமிழகத்தில் இன்று
நீலகிரி தேயிலைக்கு 2 சதவீத விற்பனை வரியைக் குறைக்க முதல்வர் உத்தரவு
சென்னை:
நீலகிரி தேயிலை விவசாயிகளி ன் பிரச்சனைகள் குறித்து விசாரித்த அதிகாரிகள் குழுஅளித்த பரிந்துரை அடிப்படையில் தேயிலை மீதான விற்பனை வரி 2 சதவீதமாககுறைத்து தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தேயிலை விவசாயிகளுடைய பிரச்சனை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கதொழில் துறை ஆணையர், தேயிலை வாரியத்தின் இயக்குனர், நீலகிரி மாவட்டஆட்சியர், மற்றும் இனச்கோசர்வின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர்அடங்கியகுழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்த அறிக்கையில் வணிக வரித் துறை மூலமாக 8 சதவீதத்திலிருந்து 4சதவீதமாக தேயிலைக்கு வரி குறைக்கப்பட்டு வணிக வரித்துறையால் அளிக்கப்பட்டசலுகை குன்னூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஏல மையங்களில் விற்கப்படும்தேயிலையோடு மற்ற தேயிலை விற்பனையும் பயன் பெறுகிறது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையை நீக்கும் பொருட்டு, நீலகிரி தேயிலை மட்டும் பயன் பெறும் வகையில்குன்னூர் மற்றும் கோவை ஏல மையங்களில் விற்கப்படும் நீலகிரி தேயிலைக்கு மட்டும்விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றுஅதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
அந்த பரிந்துரையை ஏற்று நீலகிரி தேயிலை மட்டும் பயன் பெறும் வகையில்அறிவிக்கை வெளியிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
மேலும், அதிகாரிகள் குழு தனது இடைக்கால அறிக்கையில் குன்னூர் மற்றும் கோவைஏல மையங்களில் விற்கப்படும் மாநிலங்களுக்கு இடையிலான தேயிலைவிற்பனைக்கு (இன்டர் ஸ்டேட் சேல்ஸ்) தற்போது விதிக்கப்படும் 4 சதவீதவரியிலிருந்து 2 சதவீதமாக குறைத்து வரி விதித்தால் தேயிலை விவசாயிகளுக்கு அந்தஅளவுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்று பரிந்துரைத்தனர்.
இந்த பரிந்துரையையும் ஏற்று சி படிவம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்வெளிமாநிலங்களுக்கு குன்னூர் மற்றும் கோவை ஏல மையங்களில் விற்க்ப்படும்தேயிலைக்கு 2 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் முதல்வர்ஆணையிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications