மனோஜ் பிரபாகர் மீது ரூ. 50 கோடி பண மோசடி புகார்
காத்திமா (உ.பி):
சிட் பண்ட் மூலம் ரூ. 50 கோடி அளவுக்கு பண மோசடி செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ்பிரபாகர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கபில் தேவ் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் மீது ஊழல் புகார் சுமத்தி சமீபத்தில் கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கவைத்தவர் பிரபாகர். தற்போது அவர் மீதே ஒரு மோசடி புகார் எழுந்துள்ளது.
உ.பி. மாநிலம் நைனிடால் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அகிலேஷ் மல்ஹோத்ரா இதுகுறித்துக்கூறுகையில், போலி சீட்டுப் பிடிக்கும் நிறுவனம் மூலம் ரூ. 50 கோடிஅளவுக்கு மனோஜ் பிரபாகர் பண மோசடிசெய்துள்ளார்.
1994-ம் ஆண்டு ஏப்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிதி நிறுவனத்தை பிரபாகர் துவக்கினார். இதில் அவர்உள்பட பலர் டைரக்டர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யும்படி உ.பிஉள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் செனறு பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதன் மூலம்கோடிக்கணக்கான பணம் சேர்ந்தது.
நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவும், ஏப்ஸ் இந்தியா லீசிங் அன்ட் பைனான்ஸ் லிமிடெட், ஏப்ஸ் சேவிங்அன்ட் மியூச்சுவல் பெனிபிட் இந்தியா, ஏப்ஸ் ஹவுசிங் அன்ட் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகிய கிளைகளைபிரபாகர் துவக்கினார்.
இந்த நிறுவனங்கள் மூலம் ஐந்தாண்டில் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம், பத்து ஆண்டுத் திட்டம் ஆகியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது ரூ. 25 முதல் 30 லட்சம்நிதி சேர்ந்தது.
ஹரியானா, இமாச்சல் பிரதேஷ், பீகார், மத்திய பிரதேஷ், டெல்லி, ராஜஸ்தான், உ.பி, பஞ்சாப் ஆகியமாநிலங்களில் இந்த நிறுவனத்தின் 360 கிளைகளை மனோஜ் பிரபாகர் துவக்கினார்.
நிறுவனத்தின் உரிமையாளரான மனோஜ் பிரபாகர், தான் நேரடியாக ஈடுபடாமல் போலி இயக்குநர்களைக்கொண்டு இதை நடத்தி வந்தார். மேலும், உ.பி. மாநில முன்னாள் முதல்வர் நாராயண் தத் திவாரியின் பெயரையும்,காப்பாளர் என்று கூறிக் கொண்டார். ஆனால் இதை திவாரி மறுத்துள்ளார்.
விசாரணையின்போது பிரபாகர் நிறுவனத்தின் எந்தக் கிளையும், அவர்கள் கொடுத்திருந்தபடி இல்லை. அனைத்தும்போலி முகவரிகள். லக்னோவிலுள்ள தலைமை அலுவலகமும் கூட பூட்டப்பட்டிருந்தது. இதனால்முதலீட்டாளர்கள்
அனைவரும் தங்களது பணத்தை இழந்துள்ளனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யா நைளதியால்தலைமறைவாகி விட்டார்.
பண மோசடி குறித்துத் தெரிய வந்ததும் ஏராளமானோர், லக்னோ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி பி.சி.வர்மா, மே 24-ம் தேதி வழங்கிய உத்தரவில், ஏப்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ்நிறுவனத்தின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களை விற்பதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.
லக்னோவிலுள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம், ஹல்த்வானியில் உள்ள அலுவலகம் ஆகியவைபோலீஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பிரபாகர் மீது இந்த வழக்கில் இதுவரை நான்கு மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications