பேனா விளம்பரத்திலிருந்து டெண்டுல்கர், காம்ப்ளி, அகார்கர் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

கே: மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், நன்மைகள்அதிகமா? தீமைகள் அதிகமா?

ப: முழுமையாக, முறையாகச் செயல்படுத்தினால் நிகழ் காலத் தீமைகள் இருக்கலாம். ஆனால் எதிர்கால நன்மைகள் அதிகம் இருக்கும்.

கே: இலங்கை விவகாரத்தில், இதுவரையிலான இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா?

ப: சரியில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவம் முழுமையாக வெளியேறி விட்டால் சண்டைக்கும் உயிரிழப்புக்கும் அவசியம் இல்லாமலேயாழ்ப்பாணம் தங்கள் வசமாகி விடும் - என்பது புலிகளின் கணக்கு. ஆகையால் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும்என்று கூறுகிறார்கள்.

அப்படி வெளியேறினால் ராணுவத்தினரை தாக்காமல் விட்டு விடுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இலங்கை அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.இந்திய அரசோ இலங்கை ராணுவம் வெளியேறுவதாக இருந்தால், அவர்கள் வெளியேறுவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம். கப்பல் மூலமாகவும்,விமானம் மூலமாகவும் அழைத்ததுச் சென்று விடுகிறோம் என்று கூறுகிறது. அதாவது - புலிகளின் விருப்பம் நிறைவேற, இந்திய அரசுஉதவுவதாக கூறுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி புலிகளின் வசம், யாழ்ப்பாணத்தை ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லாத குறையாக இந்தியஅரசு, இலங்கை அரசுக்கு உதவி புரிந்து வருகிறது. இதை எப்படி சரி என்று சொல்வது?

கே: பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியில் நீடிப்பதற்காக எந்த நிலைக்கும் தரம் தாழும் என்ற சோனியா காந்தியின் விமர்சனம் குறித்து...?

ப: ஆமாம். பா.ஜ.க,.வும் காங்கிரஸ் மாதிரிதான் ஆகிவிட்டது.

கே; இந்திய ஒருமைப்பாட்டுக்கு ப் புலிகளால் ஆபத்து வராது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது சரியா?

ப: ராமதாஸ் என்ன? ஈழம் உருவாவதால் இந்தியாவுக்கு எந்-த

ஆபத்தும் கிடையாது என்று பா.ஜ.க.வே கூறியிருக்கிறதே? பா.ஜ.க. பரிணாம வளர்ச்சி அடைந்து, பா.ம.க. ஆகிவிட்டது போல் இருக்கிறது இனிநமக்கு என்ன குறை?

கே: மழுப்பாமல், குழப்பாமல், சுற்றி வளைக்காமல், தலையைச்சுற்றி மூக்கைத் தொடாமல், பளிச்சென்று தேங்காய் உடைத்தாற் போல் இதற்குபதில் சொல்லுங்கள்! எதிர்காலத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?

ப: தேங்காய் உடைத்தாற்போலவே பதில் சொல்லுகிறேன். குறித்துக் கொள்ளுங்கள். படார்.

கே: இலங்கை ராணூ

ப: அமெரிக்கா அப்படி முனைந்திருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியாத விஷயம்.ஆனால் அமெரிக்காவோ, வேறு ஒரு நாடோ இப்படி முனைந்தால்,அதை எதிர்க்க இந்தியாவுக்கு அருகதை கிடையாது. ஏனென்றால் பிரச்சனையில் மூழ்கி இருக்கும் நாட்டைப் பார்த்து நாங்களும் உ.தவ மாட்டோம்;வேறு யார் உதவினாலும் அதற்குத் தடையாக நிற்போம் என்று நாம் கூறும் உரிமை, இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ கிடையாது.

கே; எந்த அதிகாரமும் இல்லாத மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி நதி நீர் ஆணையத்தை கலைத்துவிட்டு, அதிகாரிகள் மட்டும் அடங்கிய, செயல்படக்கூடிய ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளாரே?

ப: இது வெறும் பேச்சு, அதிகாரிகள், தங்கள் தங்கள் மாநில முதல்வர்களின் ஒப்புதலுடன்தான் எந்த முடிவையும் எடுப்பார்கள். அதற்குப் பதிலாக அந்தமுதல்வர்களே உட்கார்ந்து முடிவெடுப்பதால் நேரமாவது மிச்சமாகும்.

கே: வாழ்நாள் முழுவதும் சென்னை மாநகர மேயராக ஸ்டாலின் இருக்க வேண்டும் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளாரே?

ப: ஐயையோ! அப்போது ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கிடையவே கிடையாது என்கிறாரா வீராசாமி? கட்சியில் முன்னேற வேண்டும் என்ற ஆசையேஅவருக்கு அற்றுப் போய் விட்டதா?

இந்த கேள்வி-பதில் குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+