முகத்தில் தெளித்த சாரல்...
மாட்டிஸ் கார் உற்பத்தியை அதிகரிக்க தேவூ நிறுவனம் முடிவு
டெல்லி:
சிறிய வகைக் காரான மாட்டிஸ் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் அதிகரிக்க தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பி.எஸ்.மின் கூறியதாவது:
தேவூ நிறுவனம் தயாரித்து வரும் சிறிய வகைக் காரான மாட்டீஸ் காருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. தற்போது, மாதத்துக்கு 6ஆயிரம் மாட்டிஸ் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
மக்களின் வரவேற்பை அடுத்து கார்களின் உற்பத்தியை 16.6 சதவீதம் அதாவது மாதத்துக்கு 7 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களைத் தயாரிக்க முடிவுசெய்துள்ளது. நடப்பு ஜூன் மாதத்திலிருந்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் காருக்குப் பதிவு செய்துவிட்டு நீண்ட நாள் காத்திருக்காமல் ஒருவாரத்திற்குள் கார்கள் கிடைக்கும்.
குறிப்பிட்ட நிறத்தில் கார்கள் வேண்டுமென்றால், அவர்களுக்கு இரண்டாவது வாரத்தில் கார்கள் வழங்கப்படும். டெல்லியில் பதிவு செய்த சில நாட்களில்கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாட்டிஸ் கார்களின் தேவை மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்து மாதந்தோறும்கூடுதலாக ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாட்டிஸ் கார் விற்பனைக்கும், ஹுண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ கார் விற்பனைக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த மே மாதம்6.033 மாட்டிஸ் கார்களும், 5,830 சான்ட்ரோ கார்களும் விற்பனை ஆகியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் 90 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய தேவூ மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உள்நாட்டு மார்க்கெட்டில் 80 ஆயிரம் மாட்டிஸ்கார்களையும், 6 ஆயிரம் சீலோ மற்றும் நெக்ஸியா கார்களையும் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மாட்டிஸ் கார்களை வெளிநாடுகளுக்குஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மின்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications