முகத்தில் தெளித்த சாரல்...
இலங்கையைக் கூறுபோடுங்கள் - கருணாநிதி கருத்துக்கு இலங்கை அரசியல் தலைவர் கண்டனம்
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு இலங்கை சிங்களஉருமயா கட்சித் தலைவர் திலக் கருணரத்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பியக் குடியரசு நாடுகள் இலங்கையைப்பிரித்துவிடலாம் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு திலக் கருணரத்ன கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
செக்கோஸ்லோவாகிய நாட்டை செக் குடியரசு என்றும் ஸ்லோவாக் குடியரசு என்றும் பிரித்தது போல்இலங்கையையும் இரண்டாகப் பிரித்துவிடலாம் என்றும் அதுதான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்றும்கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
மற்ற நாட்டு விஷயத்தில் இந்த யோசனையைக் கூறும் கருணாநிதி, தனது நாட்டிலிருந்து காஷ்மீரைபிரித்துத் தர சம்மதிப்பாரா? தனது நாட்டில் மேற்கொள்ள விரும்பாததை வேறு நாட்டில் செய்யும்படிகூறுகிறார்.
செக்கோஸ்லோவாகியாவை இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய வல்லரசு நாடுகள்உருவாக்கின. செக்கோஸ்லோவாகியா என்பது இரு தனிப்பட்ட இனத்தவரைக் கொண்டதுமட்டுமல்ல, அது இரு நாடுகளைக் கொண்டது. ஆனால், இலங்கை விஷயத்தில் அப்படியல்ல.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரித்து விடவேண்டும்.அப்படித்தான், இலங்கைப் பிரச்சினையிலும் தமிழர்களையும், சிங்களர்களையும் தனித்தனியே பிரித்து விடலாம்.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை அவர்களிடம் பிரித்துக் கொடுத்தவிடலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.இலங்கையில் நடந்துள்ள திருமணம் பிரிப்பதற்காக அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
கருணாநிதியின் இந்த யோசனையை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றார்கருணரத்னே.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications