முகத்தில் தெளித்த சாரல்...
வர்த்தகத் தடைகளை எதிர்த்து வளரும் நாடுகள் போராட யஷ்வந்த் சின்ஹா அழைப்பு
பெங்களூர்:
வளர்ச்சியடைந்த நாடுகளின் வர்த்தகத் தடைகள் எனும் பெரும் சவாலை வளரும் நாடுகள் சந்திக்கும் நிலையில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாதெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்களின் மில்லேனியம் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சர்வதேச மார்க்கெட்டில் இந்தியாவின் ஏற்றுமதி சதவீதம் 13 சதவீதம் மட்டுமே. இது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு. இந்தியாமீது பல வளர்ச்சியடைந்த நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும், தொடர்ந்து பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சியடைந்துவருகிறது.
உலகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளுடன் கூடிய வர்த்தக முறை அமல்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் வளரும் நாடுகள், வளர்ச்சியடைந்தநாடுகளில் தங்களது உற்பத்திப் பொருட்களை கொண்டுவந்து குவிப்பது தடுக்கப்படுவதுடன், அந்த நாடுகளை அவர்கள் நிர்பந்திக்கவும் முடியாது. மேலும், ஒரேநாடு பல வர்த்தகச் சுமைகளைத் தாங்கும் நிலையும் ஏற்படாது.
எதிர்காலத்தில் இந்தியாவின பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட முடிவானஇலக்கு இல்லை என்றாலும், நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க இது மிகவும் அவசியம்.
மக்கள் வசதியாக வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதற்காகவே, பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுசெயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட இன்சூரன்ஸ் துறையிலும் தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் வாழும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால், அதிக பொருளாதார வளர்ச்சி தேவை. அந்த நடவடிக்கையில்தான்மத்திய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு அதிகம் ஏற்படுத்தி வருகிறது. பல உலக நாடுகளும்,இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய விரும்புகின்றன. அதை முழுமையாகப் பயன்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக, நேரடி வெளிநாட்டு முதலீடுதொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.
மின்சாரம், சாலை, தொலைத் தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும்,உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசுமேற்கொண்டுள்ள இம் முயற்சிக்கு மாநில அரசுகள் உதவவேண்டும். தேவையான நிதியை மாநில அரசுகள் திரட்டி மத்திய அரசுக்குத் தரலாம்என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications