தமிழகத்தில் இன்று
சிட்னி:
தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவு நாடான, சாலமன் தீவுகளில் பிரதமர்பார்த்தோலோமியூ உலுபா ஆலு தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிரவாதிகள்பிடியில் உள்ளார்.
தலைநகர் ஹோனியராவுக்குள் திங்கள்கிழமை புகுந்த தீவிரவாதிகள் ரத்தமில்லாதபுரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் உள்ளிட்ட பலரை வீட்டுக் காவலில்வைத்தனர்.
சாலமன் தீவு நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. ஜோஸஸ் துஹானுகு தற்போது சிட்னிநகரில் உள்ளார். சாலமன் தீவு நிலவரம் குறித்து அவர் செய்தி நிறுவனமொன்றுக்குஅளித்த பேட்டியில், பிரதமர் ஆலு, தீவிரவாதிகளின் பிடியில் உள்ளார். தலைநகர்ஹோனியாரவில் நிலைமை அமைதியாக உள்ளது. எந்தப் பகுதியிலும் வன்முறைநடந்ததாகத் தெரியவில்லை. சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.
சாலமன் தீவுகளில் உள்ள இரு தீவு மக்களுக்கிடையே கடந்த ஒரு வருடத்திற்கும்மேலாக மோதல் இருந்து வருகிறது. குடல்கனால் தீவுக்கும், மலத்தியன் தீவுமக்களுக்கும் இதுதொடர்பாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 60 பேர்இறந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள புரட்சிக்கு, மலத்தியன் தீவைச் சேர்ந்த"மலத்தியன் ஈகிள்ஸ் என்ற தீவிரவாதிகள்தான் காரணம்.
மலத்தியன் தீவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆண்ட்ரூ நோரிதான் புரட்சிக்குத் தலைமைவகித்துள்ளார். அவருக்கு மலத்தியன் ஈகிள்ஸ் தீவிரவாதிகளின் படை ஆதரவுகொடுத்துள்ளது. சாலமன் தீவு போலீஸாரில் சிலரும் இவர்களுக்கு ஆதரவாகஉள்ளதாகத் தெரிகிறது.
குடல்கனால் தீவைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தனிப் படை உண்டு. இவர்களுக்குஇஸதாபு சுதந்திரப் போராட்ட அமைப்பு என்று பெயர். இவர்கள், மலத்தியன் தீவுமக்கள், தங்கள் தீவுக்கு வந்து குடியேறுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதைஎதிர்த்துத்தான் கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே சண்டை நடந்துவருகிறது.
இந்த சண்டை காரணமாக குடல் கனால் தீவிலிருந்து 20,000க்கும் மேற்பட்டமலத்தியன் தீவு மக்கள் வெளியேறி விட்டனர்.
ஹவாய் தீவிலுள்ளபியர்ல் துறைமுகத்தில் முன்பு ஜப்பான் குண்டு வீசித் தாக்கியபோது,அமெரிக்கா ராணுவம், ஜப்பான் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போது, குடல் கனால்தீவில்தான் அமெரிக்க படைகள் நிலை கொண்டிருந்தன. இங்கிருந்துதான் அமெரிக்கபடைகள் இயக்கப்பட்டது.
70 மொழிகள்:
உலகிலேயே மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று சாலமன் தீவுகள்.இங்கிலாந்திடமிருந்து 1978-ல் விடுதலை கிடைத்தது. மொத்தம் 4 லட்சம் பேர் இங்குவசிக்கின்றனர். 6 முக்கியத் தீவுகளில் இவர்கள் வசிக்கிறார்கள். 70 விதமானமொழிகளை இவர்கள் பேசுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications