For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"-பு-தி-ய -த-லை-வர் நிய--ம-னத்-தால் காங். - த.மா.கா. உற-வு பாதிக்-கா-து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதால், த.மா.கா - காங்கிரஸ்உறவு பாதிக்காது என்று த.மா.கா தலைவர் மூப்பனார் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரசில் தலைமை எதிர்ப்பு என்பது யதார்த்தமானது என்றும் அவர் சொன்னார்.தமிழக காங்கிரஸ் விவகாரங்கள் குறித்து சென்னையில் புதன் கிழமை மூப்பனார்பேட்டி அளித்த பேட்-டி:

கேள்வி: தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி...?

பதில்: அவருக்கு எனது வாழ்த்துக்கள்

கேள்வி: கட்சித் தலைமைக்கு எதிராக திண்டிவனம் ராமமூர்த்தி போர்க்கொடிதூக்கியுள்ளாரே?

பதில்: அது அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை. அதைப் பற்றி நான் எதுவும்சொல்வதற்கில்லை.

கேள்வி: புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரசுடனான உறவுபாதிக்கப்படுமா?

பதில்: அவர் இப்போதுதான் வந்துள்ளார். உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கேள்வி: சத்தியமூர்த்தி பவனுக்கு வந்ததால்தான் திண்டிவனம் ராமமூர்த்தியின் பதவிபறிபோனதாக கூற்ப்படுகிறதே?

பதில்: அது உங்கள் கற்பனை

கேள்வி: திண்டிவனம் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்த.மா.கா.வில் சேருவார் என்றும் கூறப்படுகிறதே?

பதில்: அப்படி ஒரு சூழ்நிலை வரவில்லை.

கேள்வி: புதியதலைவர் நியமிக்கப்பட்ட உடனேயே கோஷ்டி அரசியல் தலைதூக்கிவிட்டதே?

பதில்: காங்கிரசில் அகில இந்திய தலைவர்களான சோனியா போன்றவர்களுக்குத்தான்எதிர்ப்பு கிளம்பாது. மற்றபடி மாநிலங்களில் இது போன்ற நேரங்களில் எதிர்ப்புஎன்பது யதார்த்தமானது. இது காங்கிரசில் சகஜம்.

கேள்வி: திண்டிவனம் ராமமூர்த்தி மாற்றப்பட்டுள்ளதால் த.மா.கா. - காங்கிரஸ் உறவில்பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

பதில்: எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.ஏற்பட்டால்தானே நினைப்பதற்கு.

கேள்வி: அ.தி.மு.க. தூண்டுதலால்தான் திண்டிவனம் ராமமூர்த்தி மாற்றப்பட்டாராமே?

பதில்: தி.மு.க. தூண்டுதல் என்று நான் நினைக்கிறேன் (சிரித்தார்)

கேள்வி: தமிழகத்திலும் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று பாண்டிச்சேரியில்பேசியுள்ளீர்களே?

பதில்: அது என்னுடைய அபிப்பராயம்.

கேள்வி: கூட்டணி ஆட்சி கிடையாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: அது அவருடைய அபிப்பராயம்

கேள்வி: காமராஜர் ஆட்சி அமைப்போம் என்றீர்கள், இப்போது கூட்டணி ஆட்சிஎன்று இறங்கி வந்து விட்டீர்கள்?

பதில்: எதிர்பார்க்கும் வெற்றி தேர்தலில் கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சிஎன்று தான் பேசியாக வேண்டும் என்றார் மூப்பனார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X