For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஒ-ரு தொலை-பே-சி தூரத்-தில் எல்.ஐ.சி.

சென்னை:

இன்ஷூரன்ஸ் தொகை பற்றி இனிமேல் கவலை வேண்டாம். தொலைபேசியில் நீங்கள்உங்கள் பாலிசி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதற்கான வசதி சென்னை, மதுரை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குவந்து விட்டது. கோவை நகருக்கு விரைவில் அந்த வசதி செய்து தரப்பட உள்ளது.

இந்த தகவல்களை சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்தியஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) தென் மண்டல பொது மேலாளர் பி.கே. பானர்ஜிதெரிவித்தார். செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

மெட்ரோ ஏரியா நெட்வொர்க் என்ற புதிய வசதி காப்பீட்டுக் கழகத்தால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் உள்ள 13 லடசம் எல்.ஐ.சிபாலிசிதாரர்களும் எந்த கிளை அலுவலகத்திலும் பணம் செலுத்தலாம். பாலிசிவிவரங்களை பெறலாம்.

இது மற்ற நகரங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். டெல்லி, பெங்களூர்,கல்கத்தா, கான்பூர், போபால், ஐதராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கனவே இந்த வசதிஉள்ளது. இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வசதியும் எல்.ஐ.சி யில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ளவர்கள் 8584141என்ற தொலைபேசி எண்ணில் தங்கள்பாலிசி விவரங்களை பெற்றுக் கொள்ள முடியும். மதுரையில் உள்ளவர்கள் 525000என்ற எண்ணிலும், எர்ணாகுளத்தில் உள்ளவர்கள் 374242 என்ற எண்ணிலும்,திருவனந்தபுரத்தில் உள்ளவர்கள் 543011 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இந்தசேவையை பெறலாம். கோவையில் விரைவில் இந்த வசதி அறிமுகப்படும்.

எல்.ஐ.சி.க்கென நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டை பூர்த்தி செய்வதில் தென்மண்டலத்திற்கு மு-த-லி-டம் கிடைத்துள்ளது. பாலிசி எண்ணிக்கையில் காப்பீடுசெய்யப்பட்ட தொகை, முதல் பிரீமியத்தொகை போன்றவற்றில் தென் மண்டலம் நல்லவளர்ச்சியை அடைந்துள்ளது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X