யூரோ கால்பந்து போட்-டி-யில் யூகோஸ்லேவியா பங்-கேற்-க வாய்ப்-பு
பிரஸ்ஸல்ஸ்:
பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளில் இம்மாதம் நடைபெறவுள்ள யூரோ-2000 கோப்பைக் கால்பந்துப் போட்டியில், யூகோஸ்லேவியா அணி கலந்துகொண்டால் வரவேற்போம் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு கொசாவோ பிரச்சினை பெரிதானதையடுத்து யூகோஸ்லேவியா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்தது. இந்த நிலையில்,யூரோ-2000 போட்டியில் யூகோஸ்லேவியா கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு விவகார ஆணையர் கிறிஸ் பேட்டனின் செய்தித் தொடர்பாளர் குன்னார் வேகன்ட் இதுகுறித்துக் கூறுகையில்,யூகோஸ்லேவியா, யூரோ-2000 கால்பந்துப் போட்டியில் பங்கேற்பதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை.
இருப்பினும், யூகோஸ்லேவியா மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடைகள் காரணமாக அந்த அணியை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பதும்,அனுமதிக்காததும், போட்டியை நடத்தும் பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளின் முடிவுக்கே விட்டு விட விரும்புகிறோம்.
யூரோ-2000 போட்டியை நடத்துவது கால்பந்துப் போட்டிகளின் தலைமையகமான சர்வதேச கால்பந்துக் கழகம்தான். இது சுவிட்சர்லாந்திலிருந்துசெயல்படுகிறது. இதற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இக்கழகம் யூகோஸ்லேவிய அணியை போட்டியில் கலந்து கொள்ளஅனுமதித்தால் அதை நாங்கள் எதிர்க்க முடியாது. மாறாக வரவேற்கிறோம் என்றார் அவர்.
பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் கொசாவோ இனத்தவர்கள், யூகோஸ்லேவிய அணியை இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றுவற்புறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெல்ஜியம் நீதிமன்றம் ஒன்றில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications