தமிழகத்தில் இன்று
தொ-ல-த் தொ-டர்-பு ஊழி-யர்-க-ளுக்-கு இலவச போன்: பிர-த-மர் க்ரீன் சிக்னல்
டெல்லி:
இந்தியா முழுவதும் உள்ள 3 லட்சம் டெலிகாம் ஊழியர்களுக்கு இலவச டெலிபோன் வழங்க பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் அளித்துள்ளார்.
டெலிகாம் ஊழியர்கள் அனைவருக்கும் இலவச டெலிபோன் வழங்கப்படும் என்று அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த மாதம் அறிவித்தார்.டெலிகாம் ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்திற்கு டெலிகாம் ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தச் சலுகைக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புத் தெரிவித்தனர். நிதிநெருக்கடியால் நாடு பரிதவித்துவரும் இந்நிலையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் ஆண்டுதோறும் கூடுதலாக 1,200 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும்.
இலவசமாக டெலிபோன் வழங்குவதால் முதல்கட்டமாக 24 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் நிதிமமைச்சகம் தெரிவித்தது.
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்து வந்தார். டெலிபோன் பயன்படுத்துவதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. யாராகஇருந்தாலும் முறைப்படி டெலிபோன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனால் நிதியமைச்சகம், தொலைத்தொடர்பு அமைச்சகம் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்சனை பிரதமர் வாஜ்பாய் முன் வைக்கப்பட்டது. இலவச டெலிபோன் வழங்குவதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பிரதமர் தனது விசேஷஅதிகாரத்தைப் பயன்படுத்தி இத்திட்டதிற்கு ஒப்புதல் தரலாம் என்ற அடிப்படையில் ராம்விலாஸ் பாஸ்வான் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார்.
இதையடுத்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பிரதமர் வாஜ்பாய் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
இக்கூட்டத்தில் தொலைத்தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ராமற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச டெலிபோன் வழங்குவதில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த இலவச டெலிபோன் வழங்கும்திட்டத்தால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டாலும், ஊழியர்களின் நலனை முன்னிட்டு இத்திட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் அளித்தார்.
இக்கூட்டம் முடிந்ததும் பிரிஜேஷ் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
நீண்ட விவாதத்திற்குப் பிறகு டெலிகாம் ஊழியர்களுக்கு இலவச டெலிபோன் வழங்க பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த இலவச டெலிபோன் இணைப்பு இன்னும் 6 மாதங்களில் அதாவது அக்டோபர் முதல் அமுலுக்கு வரும். தொலைத்தொடர்புத் துறையை கார்--ப-ரேட்நிறுவனமாக்கும் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை நிறுவனமாக்கப்பட்ட பின் அதுபாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் என்று அழைக்கப்படும்.
தொலைத் தொடர்பு ஊழியர்களின் போனஸ் 70 நாட்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications