மேட்ச் பிங்-சிங்: தர-க-ரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது டெல்லி போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் குரோனி கூறியுள்ள பரபரப்பான வாக்குமூலத்தையடுத்து டெல்லிபோலீஸ் மேற்கொண்டுள்ள விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. புக்கி சஞ்சய் சாவ்லாவை இந்தியாவுக்குக் கொண்டு வர இன்டர்போல் உதவியை டெல்லிபோலீஸ் நாடியுள்ளது.

ஏப்ரல் மாதம் மேட்ச் பிக்ஸிங்கில், குரோனியேவுக்குத் தொடர்பு இருப்பதும், புக்கிகளிடம் அவர் பணம் வாங்கியுள்ளார் என்றும் டெல்லி போலீஸ் புகார்பதிவு செய்தது. இதையடுத்து தனது குற்றத்தை குரோனியே ஒத்துக் கொண்டார். அதன் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை, நீதிபதி கிங் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தில், 1996-ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, புக்கிமுகேஷ் குப்தா என்பவரை முன்னாள் கேப்டன் அஸாருதீன் அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அவரிடமிருந்து தான் பணம் பெற்றதாகவும் குரோனியேகூறியிருந்தார்.

இந்தப் புகாரை அஸாருதீன் மறுத்துள்ளார். குரோனியே உள்பட பலர் மீது வழக்குப் போடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதியசூழ்நிலையில், டெல்லி போலீஸார், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கை முடுக்கி விட்டுள்ளனர்.

மேட்ச் பிக்ஸிங் வழக்கில் முக்கிய குற்றவாளியான புக்கி சஞ்சய் சாவ்லா, தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்குக்கொண்டு வர டெல்லி போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக இன்டர்போல் உள்பட சர்வதேச போலீஸ் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள டெல்லி போலீஸ் முயன்று வருகிறது. டெல்லி போலீஸ்இணை கமிஷனர் கே.கே.பால் கூறுகையில், இதுதொடர்பான சட்டவிவரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

குரோனியே குறிப்பிடுள்ள புக்கி முகேஷ் குப்தா குறித்து எங்களிடம் ஆதாரம் இல்லை. இந்த வழக்கில் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கானஆதாரங்கள் எங்களிடம் இல்லை.

இந்த வழக்கு தொடர்பாக அஸாருதீனை அழைத்து விசாரிக்கும் எண்ணம் இல்லை. மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள்,அஸாருதீனை விசாரிக்க வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து போலீஸ் மற்றும் இன்டர்போல் போலீஸுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், சஞ்சய் சாவ்லா இருப்பிடம் தொடர்பாக இதுவரை எந்தத்துப்பும் கிடைக்கவில்லை என்றும் பால் கூறினார்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக குரோனியே கூறியுள்ள விவரங்கள், இந்த வழக்குக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.

பால் கூறுகையில், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான புகார்கள் பலவற்றை, குரோனியேவின் வாக்குமூலம் நிரூபிப்பதாக உள்ளது என்றார்.

ஏப்ரல் 7-ம் தேதி பரபரப்பான மேட்ச் பிக்ஸிங் புகாரை டெல்லி போலீஸ் பதிவு செய்தது. இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள்போட்டியில் மோசமாக விளையாடுவதற்காக குரேனியேவும், புக்கியும்பேசிய உரையாடலின் கேசட்டையும் டெல்லி போலீஸ் வெளியிட்டது.

சொத்து விசாரணை துவங்கியது:

இதற்கிடையே, இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் குறித்த விசாரணையை வருமான வரித்துறை துவக்கியுள்ளது.

வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கிரிக்கெட் வீரர்களின் கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் குறித்தும், கணக்கில் வராத அவர்களது சொத்துக்கள், சம்பாத்தியம் குறித்தும்விசாரணை நடந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு, சமீபத்தில் சி.பி.ஐ. தரப்பில் வாய்மொழியாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேட்ச் பிக்ஸிங் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. பணத்தின் நிறம் குறித்து நாங்கள் அக்கறை காட்டவில்லை. அது எப்படி வந்தது, எவ்வளவு வந்ததுஎன்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

அஸாருதீன், கபில் தேவ், அஜய் ஜடேஜா, மோங்கியா, மனோஜ் பிரபாகர் ஆகியோரின் பெயர்கள் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற