For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹார்வர்டு, ஸ்டான்போர்டு, வாஷிங்டன், லண்டன், கொலம்பியா போன்ற பல்கலைக் கழகங்களுக்கு நிகரானதரமுடைய பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக தமிழகத்திலும் அத்தகை பெருமை மிகுபல்கலைக் கழகங்கள் பல உள்ளன. சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் போன்றவைஅவற்றில் சில.

இந்த பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றாலே உலக அளவில் நல்ல மதிப்புடன் நல்ல வேலையும்கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், அண்மைக் காலமாக இந்திய மாணவர்களிடையே குறிப்பாக தமிழகமாணவர்களிடையே வெளிநாடு சென்று அல்லது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பட்டம் பெற்றுவாழ்வில் உயரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ஏறக்குறைய30 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்ற படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவர்களை ஈர்ப்பதில் பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.அதற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் நடத்தி தங்கள் பல்கலைக் கழகங்களில் உள்ளபடிப்பு வசதிகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி மாணவ, மாணவியர்களுக்கு அழைப்புவிடுக்கின்றன. அதற்குப் பல சலுகைகளை அவை அறிவிக்கின்றன. இது தவிர, தூதரகங்கள் மூலமும் மாணவ,மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேர்ந்துபடிக்கவே இந்திய மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் படிக்கவிரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு ஃபெலோஷிப் வழங்கப்படுகிறது என்றாலும், சொந்த பணத்தைச் செலவுசெய்து படிக்கும் வசதியுடைய மாணவ, மாணவிகளைச் சேர்த்துக் கொள்ள வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்விரும்புகின்றன என்பதுதான் உண்மை.

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், அங்கு தரமான கல்வி தரப்படுகின்றனஎன்றும் கூறமுடியாது. ஆகவே, இளநிலைப் பட்டப்படிப்பு வெளிநாடுகளுக்குச் செல்லாமல், முதுகலை மற்றும்சிறப்புப் பாடத் திட்டங்களைக் கற்க வெளிநாடு செல்வது உகந்தது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் நல்ல கல்வியைப் பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் முதலில் அந்தபல்கலைக் கழகத்தின் அனைத்து விவரங்கள் அடங்கிய கையேடுகளை முதலில் படித்துப் பார்க்கவேண்டும்.மேலும், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகள்ை பயன்படுத்தி வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைத்தொடர்பு கொண்டு அங்கு அட்மிஷன் குறித்த விவரங்களையும், மேலும் பல தகவல்களையும் ஈ-மெயில் மூலம்கேட்டுப் பெறலாம். அவ்வாறு செயல்படுவதன் மூலம் நேரத்தையும், பணத்தையும் வீணாகாமல் தடுக்கமுடியும்.மேலும், வெளிநாட்டு தூதரகங்களைத் தொடர்பு கொண்டு அந்தந்த நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் பற்றியதகவல்களைப் பெறலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X