கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கொச்சித் துறைமுகம் வழங்கும் திட்டங்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை, திருப்பூர் நகரங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களைக் கவரவும், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, வர்த்தகமேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் கொச்சித் துறைகம் புதிய பல திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது.
கொச்சித் துறைமுக தலைவர் ஜேக்கப் தாமஸ், துணைத் தலைவர் ஜனார்த்தன ராவ், போக்குவரத்து பிரிவு மேலாளர்வெங்கடேஷ் ஆகியோர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
கொச்சித் துறைமுகத்தில் அதிகாரிகளின் அதிகாரப் போக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மற்றும் பல்வேறுபிரச்னைகள் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, குறைகள் களையப்பட்டுள்ளன.
கோவை மற்றும் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் தூத்துக்குடி, சென்னை போன்ற துறைமுகங்கள்வழியாகத்தான் அதிக அளவில் சரக்குகளை அனுப்பி வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு துறைமுகங்களைக்காட்டிலும், கொச்சித் துறைமுகம் தான் மிக அருகில் உள்ளது.
இந்த துறைகத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஏற்றுமதியாளர்களைக் கலந்து ஆலோசனைசெய்தோம். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்று பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
கொச்சித் துறைமுகத்திற்கு வரும் சரக்குகளைக் கையாள வல்லார்பாடம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இங்கு சரக்குகளை கப்பல்களுக்கு மாற்றும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பணிக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டென்டர் விடப்பட்டுள்ளது. இந்தப் பணி 15ஆண்டுகளில் முழுமை பெறும். இதனால், கொச்சித் துறைமுகம் பெரும் வர்த்தக மையாகும் வாய்ப்பைப் பெறும்.
கொச்சித் துறைமுகத்தின் வழியாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு எளிதாக சரக்குகளை அனுப்பஇயலும். கடந்த ஆண்டு இத்துறைமுகத்தில் 12.7 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டது. இந்த ஆண்டு இது 13.5மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியை எட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. சரக்குகளை கையாள ஆகும் தாமதம்கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் 0.87 நாளாக தற்போது உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications