For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சமை-யல் பாத்-தி-ரம் கொ-டுத்-த-வ-ருக்-கு ஜெ. 2.65 லட்-சம் -ரூபாய் பாக்-கி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு சமையல் சாமான்கள் வாடகைக்கு கொடுத்தவருக்கு 2 லட்சத்து65 ஆயிரம் ரூபாய் பாக்கியாம்.

ஐந்து வருடமாக இந்த பாக்கிப் பணம் தரப்படவில்லை என்று தனி நீதிமன்றத்தில் சமையல் சாமான்கள் வாடகைக்கு கொடுத்தவர்வியாழக்கிழமை சாட்சியம் அளித்தார்.

-முன்னாள் -முதல்வர் ஜெயலலிதாவின் -முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன். இவருக்கும் -நடிகர் சிவாஜி கணேசனின் பேத்திசத்தியலட்சுமிக்கும் பிரமாண்டத் திருமணம் -நடைபெற்றது. இந்த "மெகா திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவு 100 கோடியைதாண்டும் என்று தி-முக உள்ளிட்ட அப்போதைய எதிர்க் கட்சிகள் கண்டனம் தெ-ரிவித்தன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பாக்கி என்று ஒருவர் சாட்சியம் அளித்துள்ளது நீதிமன்றவட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது வருமானத்தை மீறி சொத்துக்கள்சேர்த்த வழக்கில் சுதாகரன் திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகினறன.

இதுவரை இதுதொடர்பாக சாட்சியம் அளித்த பலரும், லட்சக் கணக்கில் செய்யப்பட்ட செலவு விவரங்களை நீதிமன்றத்தில்தெரிவித்தனர்.

திருமணத்திற்கு தேவையான சமையல் சாமான்கள் முதல் -நாற்காலி, மேஜைகள் என சகல பொருட்களையும் வாடகைக்குவிடுபவர் சலபதிராவ். இவர் -முதலாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஆறு-முகப் பெருமாள் ஆதித்தன் -முன்னிலையில்வியாழக்கிழமை சாட்சியம் அளித்தார்.

அவர் அளித்த சாட்சியம் வருமாறு:

முன்னாள் -முதல்வர் ஜெயலலிதாவின் இல்ல அலுவலக பி.ஆர்.ஓ. சச்சிதானந்தன் என்பவர், சுதாகரன் திருமணத்திற்கு 10-நாட்களுக்கு -முன்பாக எங்கள் -நிறுவனத்திற்கு வந்தார். அப்போது திருமணத்திற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யவேண்டும் என்றார். என்னென்ன பொருட்கள் என்பதற்கான லிஸ்ட் கொடுத்தார்.

உடனடியாக ஜெயலலிதா கையெழுத்திட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முன் பணமாக கொடுத்துவிட்டுச் சென்றார். அதன்படி திருமணம் நடந்த எம்.ஆர்.சி. நகருக்கும், வரவேற்பு நிகழ்ச்சி நடந்த திரைப்பட நகருக்கும் அந்தபொருட்களை சப்ளை செய்தோம்.

பின்னர் ஐந்து நட்சத்திர ஹோட்டலான பார்க் ஷெராட்டன் உதவி மேலாளர் நிவீன் என்பவர் இதே திருமணத்திற்கு தேவையானஅலங்காரப் பொருட்கள் வேண்டும் என்றார். அதையும் சப்ளை செய்தோம். அப்போது 57 ஆயிரத்து 250 ரூபாய்க்கான காசோலைதரப்பட்டது. அதுவும் ஜெயலலிதா கையெழுத்திட்டது தான்.

நான் சப்ளை செய்த பொருட்களுக்கான வாடகைக் கட்டணம் 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய். ஆனால், அவர்கள் கொடுத்த தொகைஒரு லட்சத்து 87 ஆயிரத்து 250 ரூபாய் தான். இன்ன-மும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பாக்கி தர வேண்டியுள்ளது. ஐந்துஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் தரப்படவில்லை என்றார் சலபதிராவ்.

பின்னர் இதே திருமணத்திற்கு வாடகைக் கார்கள் சப்ளை செய்த டிராவல்ஸ் அதிபர் வின்சென்ட்ராஜ் என்பவர் சாட்சியம்அளித்தார். அவர் 10 கார்கள் வாடகைக்கு கொடுத்ததாகவும், அதற்கு 27 ஆயிரத்து 502 ரூபாய்க்கான ஜெயலலிதாகையெழுத்திட்ட காசோலை பெற்றதாகவும் தெரிவித்தார்.

பிரேம்குமார் என்ற டிராவல்ஸ் ஏஜென்ட் அளித்த சாட்சியத்தில் 6 கார்கள் கொடுத்ததாகவும், அதற்காக 19 ஆயிரத்து 611 ரூபாய்பெற்றதாகவும் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X