தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மலேசிய பள்ளி மாணவர்களுக்கு எடை குறைந்த புத்தகங்கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோலாலம்பூர்:

பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் லேசான, எடை குறைந்த புத்தகங்களை விநியோகிக்க மலேசிய கல்வி அமைச்சகம்திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை:

மலேசியாவில் தற்போது பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட பெரிய, பெரிய புத்தகங்களை பள்ளிக்குச் சுமந்து செல்கிறார்கள். இதனால் புத்தகப்பையில் கனம் கூடுவதுடன், அவர்களால் அதைத் தூக்கிச் செல்லவும் முடியவில்லை. இதனால் புத்தகத்தை எடை குறைந்ததாக மாற்ற முயற்சித்துவருகிறோம்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரு செமஸ்டருக்கு ஒரு புத்தகம் மட்டுமே இருக்கும் வகையில், எடை குறைந்த புத்தகத்தை அச்சிடத்தீர்மானித்துள்ளோம். மலாய், ஆங்கிலம், மான்டரின், தமிழ் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு இந்த "வெயிட்லெஸ் புத்தகம் வழங்கப்படும். இந்தபுத்தகங்கள் வரும் ஜூன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

துணைக் கல்வி அமைச்சர் அப்துல் ஆஜீஸ் சம்சுதீன் கூறுகையில், 12 வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காகவேஇந்தத் திட்டம். மேலும் அதிக அளவு எடையுள்ள புத்தகங்கள் பல வால்யூம்களாகப் பிரிக்கப்படுவதால் சாதாரணமாக ஒரு புத்தகத்துக்கு கொடுக்கப்படவேண்டிய விலையை விட அதிகமாக கொடுக்க வேண்டி வருமே என்று பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

ஒரு வருடத்திற்கு தவணை முறையில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அடுத்த 5 வருடத்திற்கு அதிக அளவு எடையுள்ள புத்தகங்களைப் பிரித்து 5லட்சம் மில்லியன் புத்தகங்களாக பிரித்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் 103 பாடப்பிரிவுகள் அடங்கும் என்றார்.

அரசின் புதிய திட்டம் குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் இதுகுறித்துக் கூறுகையில், குழந்தைகள் அதிக அளவு சுமையுள்ள புத்தகங்களைப்பயன்படுத்துவதால் அவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது. அவர்களால் அதிக அளவு புத்தகங்களை சுமக்க முடியவில்லை.

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியான பாட அட்டவணைகளைக் கொடுப்பதில்லை. இதனால் தினமும் பள்ளிக்குழந்தைகள் அனைத்துபாடப்புத்தகங்களையும் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. புத்தகங்களை எடைக் குறைவானதாக மாற்றினால் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாகஇருக்கும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

பாடப்புத்தகங்களுக்குப் பதில் "ஒர்க்புக்குகளாக வழங்கும்படி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. அதுகுறித்தும்பரிசீலிக்கப்படும். மேலும் மலேசியாவில் ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே அரசாங்கம் புத்தகங்களை வழங்குகிறது. பிற மாணவர்கள் அனைவரும்தாங்களாகவே புத்தகங்கள் வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் கல்வி அமைச்சர் அப்துல் ஆசிஸ் சம்சுதீன் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+