தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திரிகோணமலையில் சிறு-பான்-மை-யி-னர் ஆக்-கப்-பட்-ட தமிழர்கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திரிகோணமலை:

இலங்கை அரசு திட்டமிட்டு திரிகோணமலைப் பகுதியில் சிங்களர்களைக் குடியேற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகக் கவுன்சில் அமைப்பது, தமிழர்களுக்குஅதிக அதிகாரம் அளிப்பது போன்ற சமரச திட்டங்களை அதிபர் சந்திரிகா கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலையில் இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களர்களைக் குடியேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தச் செயலை தமிழக அமைப்பினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

கடந்த 91 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி திரிகோணமலையில் உள்ள சிங்களர்கள், முஸ்லீம்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரம் பேர்.

இது திரிகோணமலை மொத்த மக்கள்தொகையில் 64 சதவீதம் ஆகும். கடந்த 40 ஆண்டுகளுக்குமுன் திரிகோணமலையில் தமிழர்கள் மக்கள் தொகை 70சதவீதமாக இருந்தது.

ஆனால் இலங்கை விடுதலை அடைந்த பிறகு அங்கு இலங்கை அரசு திட்டமிட்டு சிங்களர்களை குடியேற்றியதன் மூலம் அங்கு தமிழர்கள் சிறுபான்மையினராகமாறிவிட்டனர்.

திரிகோணமலையில் உள்ள காலியான நிலப்பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழர் கட்சி எம்.பி.யான ஆபிரஹாம் கூறுகையில், திரிகோணமலை பல ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் அதிகம் உள்ள நகராக இருந்தது.

ஆனால் தற்போது அங்கு தமிழர்கள் சிறுபான்மையினராகி விட்டனர். அங்கு இரு சிங்கள எம்.பிக்களும், ஒரு முஸ்லீம் எம்பியும், ஒரு தமிழ் எம்பியும்உள்ளனர்.

அங்கு ஐந்து சதவீத நிலமே தமிழக மக்களுக்கு அளிக்கப்பட்டது. 95 சதவீத நிலம் சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் தானன்கிழப்பு, தட்டுவன்கோட்டை, கொழும்புத்துறை, ஆகிய இடங்களில் புதன்கிழமை நடந்த தாக்குதலில்விடுதலைப்புலிகள் 7 பேர் இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+