தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு கால கட்டங்களில் ஒவ்வொரு காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்படும். அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும்காதல் ஜோடி. நடிகை ஜோதிகாவும், நடிகர் சூர்யாவுக்கும் காதல் என காற்றில் செய்தி கசிகிறது. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் சேர்ந்துநடித்தனர். அப்பொழுதுதான் காதல் துளிர்த்ததாம்.

சூர்யா கொஞ்சம் ரிசர்வ் டைப். ஆனா ஜென்டில்மேன். நல்ல மனிதர் என்கிறார் ஜோதிகா. சூர்யாவிடம் விசாரித்தால்... லவ் அது இதுன்னு சொல்வாங்க,அப்படியெல்லாம் இல்லை. நல்ல நடிகை அவர். மும்பை பெண் என்பதால் எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். அதேமாதிரிதான் என்னிடம் பழகுகிறார்.என்கிறார்.

இருவருமே, அடிக்கடி வீட்டுக்கு போன் செய்து பேசிக் கொள்கிறார்கள். சூர்யா வீட்டில், இது நட்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் காதல் மலர்ந்துவிட்டது. அடுத்து டும்டும் டுமக்கதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பார்த்-திபன் கவிதைகள்...

பார்த்திபன்...படப்பிடிப்புக்கு வரும்பொழுது கையோடு, தவறாமல் ஒரு பேடு, பேப்பருடன் வருவார். தனக்கு அவ்வப்பொழுது தோன்றும் புதுக்கவிதைகளைஎழுதி வைத்துக் கொள்கிறார். இப்படிப் பிறந்த திடீர் கவிதைகளை தொகுத்து புத்தகமாகவும் வெளியிட இருக்கிறாராம் பார்த்-திபன்.

தெலுங்கில் குஷி...

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின், குஷிபடத்தை தெலுங்கில் தயா-ரிக்கப்போகிறார். டைரக்டர் சூர்யா. ஏன் டப்பிங் செய்யவில்லை. விஜய்யின் மார்கெட்தெலுங்கில் ச-ரியில்லையா? இல்லை கதையை மாற்றி எடுக்கப்போகிறாரா?

அது பற்றி ஏதும் சொல்ல மறுக்கிறார். குஷி படம் தனக்குப் பெரிய வெற்றிப்படம் என்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்.

படத்தில் சிறப்பாக -நடித்திருப்பவர், விஜய்யா, ஜோதிகாவா என்று சூர்யாவிடம் கேட்டால் அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்று -நழுவிக்கொள்ளும்டைரக்டர் சூர்யா, ஜோதிகா ஒரு -நவீன சாவித்தி-ரி, -நடிப்பிலும் உருவத்திலும் என்கிறார்.

குஷி படத்தில் செக்ஸ் காட்சிகளை, வேண்டும் என்றே சேர்த்தேன் என்று தைரியமாகப் பேசும் சூர்யா அது வியாபார நோக்கத்துடன் அல்ல, ஒரு கதையைச்சொல்லும் போழுது, சில காட்சிகள் அதன் ஒட்டத்திற்குத் தேவைப்படும். அப்படித்தான் குஷி படத்திற்கு சில செக்ஸ் காட்சிகள் தேவைப்பட்ட-ன.

அவை, பார்ப்பவர்க-ளை முகம் சுளிக்-க வைப்-ப-தா-க இருக்காது, சிரிப்பூட்டும் விதத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார் சூர்யா.

அஜீத், ஒரு கால்ஷீட் கொடுத்து இவரையே தயாரிப்பாளராகவும் ஆக்கியுள்ளாராம். தன் சினிமா வாழ்க்கைக்கு தீபம் ஏற்றி வைத்தவர் என்று-நன்றிப்பெருக்குடன் சொல்கிறார் டைரக்டர் சூர்யா.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற