For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

டெஸோவா, அப்படீன்னா..? கேட்-கி-றார் க-ரு-ணா-நி-தி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டை கூட்ட முடியாது. அப்படியொரு அமைப்பே தற்போது இல்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

இதன் மூலம் பாமக தலைவர் டாக்டர் ராமதாசின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டை முதல்வர்கருணாநிதி கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அதை அடியோடு நிராகரிக்கும் வகையில் முதல்வர் இப்பதிலை அளித்தார்.

சேலத்தில் சனிக் கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: காவிரி பிரச்னை இன்னும் தீராததற்கு காரணம், தமிழக அரசும், கர்நாடக அரசும் தான் என்று பேராசிரியர் நஞ்சுண்டசாமி கருத்துதெரிவித்துள்ளாரே?

பதில்: அது அவருடைய கருத்து.

கேள்வி: முன்னாள் பிரதமர் தேவகவுடா அளித்த பேட்டியில், காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு நாடகமாடுவதாகவும், அதனால் தான் பிரச்னைதீரவில்லை என்றும் கூறியுள்ளாரே?

பதில்: தேவகவுடா பிரதமராக இருந்தபோதே, காவிரிப் பிரச்னையை தீர்த்து வைத்திருக்கலாம்.

கேள்வி: மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டு வருவதாகவும், 55 நாட்களுக்குத் தான் வரும் என்றும் கூறப்படுகிறதே?

பதில்: கவலைப்படக் கூடிய அளவிற்கு ஒன்றும் இல்லை.

கேள்வி: பரூக் அப்துல்லா சுயாட்சி பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். திமுகவின் நீண்ட நாள் கொள்கை தான் மாநில சுயாட்சி. அதைப் பற்றி உங்கள்கருத்து என்ன?

பதில்: 1974ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக திமுக ஆட்சியில் தமிழகச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தைநிறைவேற்றியவர்கள் நாங்கள். அந்த தீர்மானத்தின் அடிப்படை கருத்துக்களிலிருந்து நாங்கள் எந்த மாற்றமும் பெறவில்லை. தொடர்ந்து மாநலத்தில்சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற எங்கள் கொள்கையை வலியுறுத்தி வருகிறோம்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னை 1953ம் ஆண்டுக்கு முன்பிருந்த விசேஷ அந்தஸ்து பற்றியதாகும். அதுபற்றி காஷ்மீர் முதல்வரும், இந்திய பிரதமரும்பேசியிருக்கிறார்கள்.

கேள்வி: திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், அதிமுக எம்.பி. தினகரனை சந்தித்துப் பேசியது பற்றி?

பதில்: அதைப் பற்றி எனக்குத் தெரியாது.

கேள்வி: டெசோ மாநாட்டை கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டுவீர்களா?

பதில்: "டெசோ என்பது தமிழ் ஈழம் சப்போர்ட்டர்ஸ் ஆர்கனைசேஷன் என்பதாகும். அந்த அமைப்பே இப்போது இல்லை. அதனால் அதன் சார்பில்மாநாட்டை கூட்டுகிற திட்டம் இல்லை.

கேள்வி: மாநில பொதுத்தேர்தலை கவர்னர் ஆட்சிப் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனர் கில் கூறியிருப்பது பற்றி?பதில்: அவர் கூட்டிய கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர் வீராசாமியும், விடுதலை விரும்பியும் கலந்து கொண்டு திமுகவின் கருத்தை கூறியுள்ளனர். அதைஅப்போதே வெளியிட்டுள்ளனர். பத்திரிகைகளிலும் வந்துள்ளது.

கேள்வி: வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் மேலும் கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளதா?

பதில்: வாய்ப்பு இருக்கலாம்.

கேள்வி: தமாகாவுக்கு சூசகமாக அழைப்பு விடுத்ததைப் போல் தெரிகிறதே?

பதில்: ஒரு திருமண விழாவில் தமாகா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியதற்கு நான் பதில் சொன்னேன். அவ்வளவு தான்.

கேள்வி: தமிழகத்தின் சொத்துக்களை பாதுகாக்கவாவது, கடந்த தேர்தலில் இருந்த கூட்டணி நீடிப்பது நல்லதல்லவா?

பதில்: உங்கள் ஆசை நல்லெண்ணத்தின்பாற்பட்டது.

கேள்வி: தமிழக அரசு சமச்சீர் வரியை முழுமையாக அமல்படுத்தியிருக்கிறதா?

பதில்: பெருமளவிற்கு அமல்படுத்தியிருக்கிறோம் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X