"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

Subscribe to Oneindia Tamil

2 ஆண்டுக்கு முன்பே உரசிக் கொண்ட கோவை எம்.பியும், கமிஷனரும்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணனுக்கும், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கும்கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே "பனிப்போர் உருவாகியுள்ளது.

கோவையில் கடந்த 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் போலீஸ்காரர் செல்வராஜ்கொலை செய்யப்பட்டபோது, போலீசாரே உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில்இறங்கினர். குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மற்றொரு சமூகத்தினர் மோதிக்கொண்டபோது, போலீசார் நடத்திய போராட்டம் பெரும் பிரச்னையை உருவாக்கியது.

போலீஸ்காரர் கொலையை அடுத்து நடந்த கலவரம், மோதலில் ஒரே நாளில் பலர்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையே பின்னாளில் குண்டு வெடிப்பிற்குகாரணமாகியது.

1997ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அத்வானி கோவைக்கு வருவதையொட்டிநடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60 பேர் இறந்தனர். இதனையடுத்து கோவையின்நிலையை உணர்ந்த அரசு, போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனை கோவைக்கு 1998ம்ஆண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தது.

தனது திறமையால், மிகவும் சாதுர்யமாக பிரச்னை தொடராமல் தடுத்து நிறுத்தியபெருமை, கமிஷனர் ராதாகிருஷ்ணனைச் சேரும். அதோடு பல இடங்களில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டுகளைக் கைப்பற்றியதோடு, குண்டு வெடிப்பில்தொடர்புடையவர்களைக் கைது செய்வதிலும் ராதாகிருஷ்ணன் தீவிரம் காட்டினார்.

அதேசமயம், கோவையில் பல பாரதிய ஜனதாத் தொண்டர்களையும் முன்எச்சரிக்கையாக கைது செய்து பிரச்னையைத் தீர்ப்பதில் முனைப்பு காட்டினார்.இவ்வாறு பா.ஜ.,தொண்டர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்ததால்,பா.ஜ.கவினரிடையே கமிஷ்னர் மீது அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

பின்னர், ஓராண்டுக்கு பின்னர் கோவைக்கு மீண்டும் உள் துறை அமைச்சராக அத்வானிமீண்டும் வந்தபோது, கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் போலீஸ் பாதுகாப்பைதீவிரமாக்கினார். அந்தசமயத்தில், சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்த உள்துறை அமைச்சர்அத்வானியைச் சந்திக்க கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த கமிஷ்னர் ராதாகிருஷ்ணன், அத்வானியைச் சந்திக்கஅனுமதிக்க மறுத்துள்ளார்.

அப்போது ஆவேசமடைந்த எம்.பி.,ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனரைப் பார்த்து"".........எங்கள் தலைவரைச் சந்திக்கவே அனுமதியா?.. என்று ஒருமையில்அழைத்துப் பேசியபோது, பிரச்னை தொடங்கியது.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு விஷயத்திலும் "பனிப்போர் நீடித்தது.எம்.பி.,யின் சிபாரிசு போலீசாரிடம் எடுபடவில்லை. அதோடு தற்போது நடந்தசம்பவம், எம்.பி.,மீது வழக்குத் தொடர ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஆனால்,பொதுமக்களிடையே தற்போது எழுந்துள்ள கேள்வி, "சாவு வீட்டில் வீடியோ எடுக்கவேண்டிய அவசியம் என்ன? என்பது தான்.

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னர், கோவையில் அமைதியைஏற்படுத்தியதற்காக குண்டுவெடிப்புச் சம்பவத்தை விசாரணை மேற்கொண்டகோகுலகிருஷ்ணன் கமிஷனர் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனையும், மாவட்டகலெக்டர் சந்தானத்தையும் பாராட்டியுள்ளது. அதோடு பொதுமக்களிடையேயும்,இருவரும் நற்பெயரைப் பெற்று விட்டனர். அதேசமயம் பா,ஜ.க,வினரிடையே மட்டும்கமிஷனர் ராதாகிருஷ்ணன் அதிருப்தியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பா.ஜ.க,வினரோ, கோவையில் அமைதி திரும்பியதற்குக் காரணம், போலீஸ் கமிஷனர்அல்ல...பொதுமக்கள் தான். பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே கோவையில்அமைதி திரும்பியுள்ளது. இதில், போலீஸ் கமிஷனரின் பங்கு எதுவுமில்லை எனக்கூறுகின்றனர்.

மேலும், தி.மு.க. சார்பாக போலீஸ் கமிஷனர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும்பா.ஜ.,வினரிடையே உண்டு. மத்தியில் பா.ஜ.க. மாநிலத்தில் தி.மு.க. இரண்டும்கூட்டணி என்ற நிலை நீடித்து வந்தாலும், கோவையில் நடந்த போலீஸ்- அரசியல்மோதலில் உள்ளூர் தி.மு.க. வினர் இதுவரை வாய் திறக்கவில்லை. இச்செயலைக்கண்டித்தோ, ஆதரித்தோ அறிக்கையும் விடவில்லை.

ஆனால் போலீசாருக்கும் பா.ஜ.க,வினருக்கும் இடையே ஏற்பட்டு இருந்த விரிசல்,இன்னும் கூடியுள்ளது. போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும் என்ற கங்கணம் கட்டிக்கொண்டுள்ள பா.ஜ.க,விற்கு வெற்றி கிடைக்குமா? என்பதும், எம்.பி., உட்படபா.ஜ.,வினரைக் கைது செய்வதில் போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எப்போதும் பா.ஜ.,விற்கு பரம எதிரியாக விளங்கும் கம்யூனிஸ்ட் கட்சியோ,சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜ.,வினரை இன்னும் ஏன் கைது செய்ய வில்லை எனவினாத் தொடுத்துள்ளது.

இப்பிரச்னையைத் தீர்க்க மேல்மட்டத்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தை எந்தமுடிவைக் கொடுக்கும் என்பது விரைவில் தெரியும். டெல்லியில் முகாமிட்டுள்ளஎம்.பி.,ராதாகிருஷ்ணன் கோவை திரும்பியதும் மேல்மட்டப் பேச்சுவார்த்தை என்னஎன்பதும் வெளிச்சமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+