அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து ஆராய ஆகஸ்டில் முதல்வர்கள் மாநாடு : அத்வானி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒடுக்குதல், வகுப்புக் கலவரத்தைத் தடுத்து நிறுத்துதல், போன்றவை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலமுதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தீவிரவாதம், வகுப்புக் கலவரம் மற்றும் வேறு வகையான உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வர்கள்மாநாடு நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து உள்துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலர்கள், மாநில டிஜிபிக்கள் ஆகியோருடன்புதன்கிழமை ஆலோசனை நடத்தப்படும்.
முதலவர்கள் மாநாட்டுக்கு பிரதமர் வாஜ்பாய் தலைமை தாங்குவார். உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடுநடத்தப்படுவது இதுவே முதல் முறை. சில மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்படும்.
நாட்டில் செயல்படும் எந்த ஒரு மத அமைப்பையும் தடை செய்வது என்பது மத்திய அரசின் கொள்கையல்ல. அதனால் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது. நாட்டில் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது ஒரு அரசின் கடமையாகும். அந்த வகையில் தான் மத்திய அரசுசெயல்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து அறிக்கை கோரப்பட்டது. இந்தஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு எந்த மத ரீதியான காரணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஎன்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications