தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சவுதியின் பிடி இறுகுகிறது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">துபாய்:

சவுதிஅரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டினர் அனைவரும் அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சவுதிஅரேபியா கூறியுள்ளது.

இதுகுறித்து சவுதிஅரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரமாவது:

எண்ணெய் வளம் மிக்க நாடான சவுதிஅரேபியாவில் இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வேலைவாய்ப்புத் தேடி வரும் மக்கள்நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள்.

மேலும் இவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய வேலையில் சேராமல் வேறு வேலைகளில் சேர்கிறார்கள்.

இதே போல் அனுமதியில்லாமல் வேறு வேலைகளில் சேரும் வெளிநாட்டினர் அனைவரையும் மீண்டும் தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதற்குசவுதிஅரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் சவுதி உயர்அதிகாரிகள் இங்கே வேறு வேலைகளில் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கைஎடுப்பார்கள்.

சவுதியில் உள்ள 20 மில்லியன் மக்கள்தொகையில் வேறுநாட்டினரின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. மேலும் இவர்களால் நாட்டின் பாதுகாப்புக்குஇடையூறுகள் இருப்பதுடன், சவுதிஅரேபிய மக்களின் வேலைவாய்ப்பை இவர்கள் பறித்துக்கொள்கிறார்கள்.

எங்கள் நாட்டின் சட்டப்படி, இங்கு வேலைதேடி வருபவர்கள், முன்அனுபவம், தகுதிச்சான்றிதழ் ஆகியவற்றை தெளிவாகக் காட்டியபின்தான் இங்கு வேலையில்சேர முடியும்.

அதையும் மீறி போலி சான்றிதழ்கள் தயாரித்து வேறு வேலையில் சேர முயலும் அனைவரும் அவர்கள் நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுவார்கள். அவர்கள்வேறு வேலையில் சேர உடந்தையாயிருந்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு சவுதிஅரேபியா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற