For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நாங்கள் நிரபராதிகள் - டான்சி வழக்கில் "உடன்-பி-ற-வா- சகோ-த-ரி-கள் வாக்-கு-மூ-லம்

சென்னை:

டான்சி நிலபேர ஊழல் வழக்கில் நாங்கள் நிரபராதிகள். எங்களுக்கு எதுவும் தெரியாதுஎன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாஇருவரும் தெரிவித்தனர்.

3-வது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் திங்கள்கிழமை ஆஜராகிவாக்குமூலம் அளித்தனர்.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியதன் மூலம் அரசுக்குகோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 6பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மூன்றாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் முன்னிலையில்நடைபெற்று வருகிறது. வழக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும்இவ் வழக்கு விசாரணை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இந் நிலையில், 2-வது நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கரி ஊழல்வழக்கில் ஆஜராகிவிட்டு அடுத்து ஜெயலலிதாவும், சசிகலாவும் 3-வது சிறப்புநீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தார்கள். அதன்பிறகு இருவரும்நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

ஜெயலலிதா:

25-1-90 ம் ஆண்டு பிறப்பித்த அரசு ஆணைப்படி சிப்காட், டான்சி போன்ற அரசுநிறுவனங்கள் செலுத்தியுள்ள முத்திரைத் தீர்வையை திரும்ப வழங்க வேண்டும்.இப்படிப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடுத்ததே தவறான காழ்ப்புணர்ச்சியோடுபழிவாங்கும் எண்ணத்தோடு தொடுக்கப்பட்ட பொய் வழக்குதான் இது என்பது இதில்இருந்தே தெரிகிறது.

சசிகலா:

கருணாநிதி ஆட்சி நடந்த அன்று போடப்பட்ட அரசு ஆணைப்படி டான்சி நிலத்துக்குமுத்திரைத் தீர்வை போடக்கூடாது. எனவே ஏற்கனவே நாங்கள் செலுத்திய பணத்தைவட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விசாரணைமுடிந்தவுடன், வழக்கு பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்றுநீதிபதி கேட்க ஆம் என்ற ஜெயலலிதா, இவ் வழக்கில் ஒன்றை மட்டும் தங்களின்கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறிபேசினார்.

இந்த பொய் வழக்குகள் புனையப்பட்ட நாளில் இருந்தே முதல்வர் கருணாநிதி உட்படபலரும் இந்த வழக்கைப் பற்றி தாறுமாறாக பேசிவருகிறார்கள் என்பதை கடந்த 26-ம்தேதி அன்றே தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவந்த பொழுது மற்றவர்கள்என்ன பேசினாலும் நீதிமன்றம் அதை எடுத்துக்கொள்ளாது என்று சொன்னீர்கள்.

ஆனால் அதன்பிறகு கூட அமைச்சர் தமிழ்க்குடிமகன், ஆளும்கட்சி விவசாய அணிபிரிவுச் செயலாளர் கே.பி.ராமலிங்கம், தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்ஆர்.எம்.வீரப்பன், கூட்டணிக் கட்சியின் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் தொடர்ந்துஇதுபற்றி பேசிவருகிறார்கள்.

குறிப்பாக தண்டனை பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார்கள். அந்தச் செய்திகள்பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன. அதற்கான ஆதாரங்களையும் தங்களிடம்சமர்பிக்கிறேன். தொடர்ந்து இப்படி கோர்ட் அவமதிப்பு செய்து பேசுவதற்கு ஒருஎல்லை இல்லையா?

இவர்கள் மீதும் இவ்வாறெல்லாம் ஏற்கனவே கோர்ட் அவமதிப்பு செய்து பேசியகருணாநிதி, ஆலடி அருணா, ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி , துரைமுருகன்,பொன்முடி, சற்குணபாண்டியன் உட்பட அனைவர் மீதும் இப்பொழுதாவது உடனேநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நிரபராதி எந்தக்குற்றம் செய்யவில்லை என்றார் ஜெயலலிதா.ஜெயலலிதாவை அடுத்து சசிகலா பேசினார்.

சசி எண்டர்பிரைஸஸ் டெண்டர் போட்டபோது அனைத்து ஆவணங்களிலும்மானேஜர் மட்டுமே கையெழுத்து போட்டார். அதுவே போதுமானதாகவும்எடுத்துக்கொள்ளப்பட்டது.

என் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நான் மட்டுமேகையெழுத்து போட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரி முன்னாள்முதல்வர் ஜெயலலிதா எதிலும் கையெழுத்து போடவில்லை என்பதைகூறிக்கொள்கிறேன்.

வேண்டும் என்றே அவருடைய கையெழுத்தை போர்ஜரி செய்து உள்ளார்கள். என்நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் நானே பொறுப்பு .ஜெயலலிதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.

முதல்வரை அதிகார துஷ்பிரயோகம் செய்ய நான் தூண்டியதாகவும் அதற்கு அவர்இணங்கி சதி ஆலோசனையில் ஈடுபட்டு இந்த நிலபேரத்தில் ஈடுபட்டதாககுற்றச்சாட்டை நீங்கள் என்மீது பதிவு செய்தீர்கள்.

அது உண்மையாக இருந்தால் எங்களுக்கு சம்பந்தம் இல்லாத மற்ற 4நிறுவனங்களையும் இந்த டெண்டரில் விண்ணப்பிக்க அனுமதித்து இருப்போமா?எனவே டான்சி நில விற்பனை விவகாரத்தில் எவ்விதமான சதி மற்றும் சூழ்ச்சியிலும்யாரும் ஈடுபடவில்லை.

அது வெளிப்படையாக ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெற்ற நில விற்பனைவிவகாரம். நான் நரபராதி எவ்வித தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் சசிகலா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X