தமிழகத்தில் இன்று
ஓட்டுக்காக நாடகமாடுகிறார் கருணாநிதி ... ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
ஓட்டு வங்கிக்காக தலித் ஆதரவாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்ள முதல்வர் கருணாநிதி நாடகமாடுகிறார் என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் எஸ். ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கமாக உள்ள திமுகவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே சமீபகாலமாக நல்ல உறவு இல்லை. மூன்றுநாட்களுக்கு முன் தமிழகம் வந்த பிரதமர் வாஜ்பாய், பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே மீண்டும் சுமூக உறவை வலுப்படுத்தும் நோக்கில்முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி மீது கடும் குற்றச்சாட்டுகளை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்பது போல் முதல்வர் கருணாநிதி பேசிவருகிறார். சம்பவத்துக்குக் காரணமான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார்.
சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலித்துகளின் வாக்குகளை மனதில் வைத்து அவர்கள் ஆதரவாளர்களாக தன்னைக்காட்டிக்கொள்ள கருணாநிதி முயற்சிக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் மற்றொரு வன்னியர் இயக்கம் உருவாக தமிழக அரசு ஆதரவாகச் செயல்படுகிறது.
எந்த பிரச்சினையானாலும், தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கட்சியாகவே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே சுமூக உறவு இல்லை என்பதை தமிழகம் வந்த பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.அது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் கலந்தாலோசிப்பதாக அவர் உறுதி கூறினார் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications