தமிழகத்தில் இன்று
சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு மன்னிப்புக் காலம் முடிந்தது
துபாய்:
வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் இன்னும் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்குத் தண்டனையும், அபராதமும் விதிக்க அந் நாட்டுஅரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவு பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்வதுடன் அதிக அளவு அவற்றை ஏற்றுமதி செய்து வரும் நாடான சவூதிஅரேபியாவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர்.
குறைந்த சம்பளம் மற்றும் மோசமான வேலைச் சூழ்நிலை ஆகியவற்றால் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்ற அந் நாட்டுமக்களே விரும்பவில்லை.
இதையடுத்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில்பணியாற்றி வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு பணியாற்றுகின்றனர்.
இந் நிலையில், சர்வதேச மார்க்கெட்டில் எண்ணெய் விலை உயர்ந்தது. மேலும், சவூதி அரேபியாவின் பொருளாதாரம் குறைந்தது. இதையடுத்து தன் நாட்டில்சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியே அனுப்ப முடிவு செய்தது.
சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினரை வெளியேற்றும் பணி 1997-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்தஏப்ரல் 20-ம் தேதி சவூதி அரேபிய அரசு புது உத்தரவைப் பிறப்பித்தது.
ஜூலை 10-ம் தேதி வெளிநாட்டினருக்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குச்சென்றுவிடவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், 27 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும். மேலும்,அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
திங்கள்கிழமையுடன் சவூதி அரேபிய அரசின் கால அவகாசம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் தங்களதுதூதரக அலுவலகங்ளைத் தொடர்பு கொண்டு நாடு திரும்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இந்திய தூதரகத்தை 3000 பேர் தொடர்பு கொண்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 650 பாகிஸ்தானியர்கள் தங்களது தூதரகத்தைத்தொடர்பு கொண்டதாக அத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமையுடன் கால அவகாசம் முடிவுக்கு வந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பாமல் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications