தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"பாலஸ்தீனியர்கள் நலனை இந்தியா புறக்கணிக்காது
குவைத்:
இஸ்ரேலுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் கூட பாலஸ்தீனியர்களின் நலன்களை இந்தியா புறக்கணிக்காது என்று இந்தியா கூறியுள்ளது.
குவைத்திற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா, செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்குஆசிய அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று இந்தியா நம்புகிறது. அரேபியர்கள் குறிப்பாக பாலஸ்தீனியர்களின் நலனை இந்தியாபுறக்கணிக்காது.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி சமீபத்தில் இஸ்ரேல் போய் வந்ததால், பாலஸ்தீனியர்களின் நலனை இந்தியா கண்டுகொள்ளாது என்று அர்த்தமில்லை.அத்வானியின் பயணத்தால், இந்தியாவின் நிலையில் மாற்றம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications