தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய 16 வயது பெண் அகதியின் பிணம்

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் 16 வயது இலங்கை அகதிப் பெண்ணின் உயிரற்ற உடல் கரை ஒதுங்கியது.

திரிகோணமலையிலிருந்து ஜூலை 6-ம் தேதி 18 தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் தப்பி வந்தனர். வரும் வழியில் இவர்களது படகுகள் நீரில் தத்தளித்தன.இவர்களைப் படகுகளில் தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தவர்கள் பாதி வழியிலேயே ஒரு தீவில் இறக்கி விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

மிகுந்த சிரமத்திற்கிடையில், 17 பேர் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் குமுதினியை மட்டும் காணவில்லை. கடல் நீரில் சிக்கி அவர்உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் குமுதினியின் உடல் அரிச்சமுனை என்ற இடத்தில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. உடலை குமுதினியின் கணவர் அடையாளம் காட்டினார்.

இந்த அகதிகளை படகுகளில் தனுஷ்கோடிக்கு அழைத்து வந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். ஒருவரைத் தேடி வருகின்றனர்.

குமுதினியின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+