For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜெயலலிதாவும் 9 கோரிக்கைகளும்

சென்னை:

வைகோ கைது, தி.மு.க. ஜம்மு காஷ்மீர் அரசுகள் டிஸ்மிஸ், மத்திய பா.ஜ.க அரசு பதவி விலகல் உள்பட 9கோரிக்கைகளை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

சொந்த மண்ணில் பயங்கர வாதத்தையும், பிரிவினை வாதத்தையும் எதிர்த்துப் போராடும் இந்தியாவை, தனதுஅண்டை நாட்டில் பயங்கர வாதத்தையும், பிரிவினை வாதத்தையும் பகிரங்கமாக ஆதரிக்கும் கட்சிகளான தி.மு.க,ம.தி.மு.க, பா.ம.க போன்றவை ஆள்வது பெருத்த அவமானம்.

ஈரோட்டில் நடந்த மாநாடு தேசப் பற்றுள்ள இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட இறுதி அவமானம். இச்சூழ்நிலையில்நான் 9 கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரை நாடு கடத்திக் கொண்டு வரதேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். அல்லது ராஜீவ்கொலைக்காக இந்திய மண்ணில் விசாரணை நடத்துவதற்கு, அவர்களை ஒப்படைப்பதற்கு உரிய பயனுள்ளநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிரிமினல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தேடப்படும் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை பாதுகாத்துஆதரவு அளித்ததற்காகவும், அவர் சார்பாகவும், தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு சார்பாகவும் ஒருமாநாட்டை நடத்தி அதன் மூலம் மிகப் பெரும் தேசத் துரோகத்தை இழைத்ததற்காகவும் வைகோவை கைது செய்யவேண்டும்.

ஈரோட்டில் நடந்த மாநாட்டில் விருந்தாளியாக கலந்து கொண்டு தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஊக்கம்அளிக்கும் வகையில் தனது பங்களிப்பை செலுத்தி உள்துறை அமைச்சர் அத்வானி ராஜினாமா செய்ய வேண்டும்.

இலங்கையில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஆதரிப்பதற்காகவும் உலக அரங்கில் இந்தியாவைஒரு இக்கட்டான நிலைமைக்கு ஆளாக்கியதற்காகவும் ம.தி.மு.க, பா.ம.க, தி.முக ஆகிய கட்சிகள் மத்திய அரசில்இருந்து நீக்கப்பட வேண்டும்.

மாநில சுயாட்சிப் பிரச்னையில் இந்திய அரசை ஆளும் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் பொறுப்பு பற்றிஜனாதிபதி தெளிவான ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக ஜம்மு காஷ்மீர் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். காஷ்மீர்சட்டமன்றம் கலைக்கப்பட்டு அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.

செக்கோஸ்லோவேகியா போன்றோ, வேறு வகையிலோ தனி ஈழம் உருவாவதை ஆதரித்ததற்காகவும், ஈரோடுமாநாட்டையும், பேரணியையும் நடத்த அனுமதித்ததற்காகவும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள மற்றும் அதனை ஆதரிக்கும் கட்சிகளை இந்திய நாட்டின் வெளியுறவுக்கொள்கை பற்றி தன்னிச்சையான அறிவிப்புகள் செய்வதற்கு தடை விதித்து தெளிவான ஆணைகள் பிறப்பிக்கப்படவேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசால் அமல்படுத்த முடியாவிட்டாலோ, அல்லது கூட்டணிகட்சியினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தவறினாலோ, கூட்டணிக் கட்சிகள் தேச விரோதமாகபேசுவதையும், தேசம் மற்றும் நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும் தடுக்கத் தவறினாலோ பா.ஜ.க.அரசு பதவி விலக வேண்டும் என்கிறார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X