தமிழகத்தில் இன்று
மீண்டும் திமுக - தமாகா கூட்டணி?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், திமுக இளைஞர் அணித் தலைவர் மு.க.ஸ்டாலினும்,வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அடுத்த தேர்தலுக்குள் அணி மாற்றம் நிச்சயம் என்று தி.மு.க தலைவரும், முதல்வருமான கருணாநிதிதிட்டவட்டமாக கூறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், த.மா.கா, தலைவர் மூப்பனாரும், முதல்வர் மகன் மேயர்ஸ்டாலினும் திடீர் ஆலோசனை நடத்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அடுத்தாண்டில் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கும் தி.மு.க வும், அ.திமு.க வும் தங்களதுஅணியின் பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்கி விட்டன.
கட்சிகளின் பலம், தொண்டர்களின் விருப்பம் ஆகியவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கான காய்களைமெல்ல நகர்த்தி வருகின்றன. இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்குமே கூட்டணி விஷயத்தில் இப்போது அஷ்டமச்சனி தான்.
தி.மு.க வில் பா.ம.க நீடிக்குமா? அ.தி.மு.க வுடன் த.மா.கா தொடருமா? என்று எழுந்துள்ள சந்தேகங்களுக்குவிடை சொல்ல தெரியாமல் இந்த இரு கட்சிகளும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில் அணியில் இருந்து வெளியேறத் துடிக்கும் கட்சியின் பலத்தையும், அதை ஈடுக்கட்ட எந்த கட்சியைஇழுக்கலாம் என்பது பற்றியும் இந்த இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ரகசிய கணக்குப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று தூண்டிலும் கையுமாககாத்திருக்கின்றன த.மா.கா.வும், பா.ம.க.வும். இந்த கட்சிகளுக்குள்ளும் பேரங்கள் பற்றிய பேச்சு தான்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் இப்போது நடந்து கொண்டிருப்பது"ஆலோசனைக் காண்டம் என்று கூட சொல்லலாம்.
இந்த ஆலோசனைக் காண்டத்தின் ஒரு கட்டமாக மூப்பனார் - ஸ்டாலின் சந்திப்பு நடந்துள்ளது. கொஞ்சநாட்களுக்கு முன்னால், சென்னையில் தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண விழாவில் த.மா.கா எம்.எல்.ஏ.ரங்கநாதன் கலந்து கொண்டு, முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.வை "தீய சக்தி என்று வர்ணித்து பரபரப்பைஏற்படுத்தினார்.
அந்த பரபரப்போடு முதல்வரும் சேர்ந்து கொண்டு, தி.மு.க கூட்டணியில் மீண்டும் சேர த.மாகா.வுக்கு பகிரங்கஅழைப்பு விடுத்தார். அதன் விளைவோ இந்த திடீர் ஆலோசனை என்ற கேள்வி எழுந்துள்ளது.
த.மா.கா. பிரமுகரும், சென்னை மாநகராட்சியின் எதிர்க் கட்சித் தலைவருமான வெற்றிவேல் மகள் திருமணநிச்சயதார்த்தம், சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடைபெற்றது. மூப்பனாரும், ஸ்டாலினும் சிறப்புவிருந்தினர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க, த.மா.கா, காங்கிரஸ் தலைவர்களை மட்டும் அழைத்திருந்தனர்.அ.தி.மு.க.வினருக்கு அழைப்பில்லை என்பது தான் பெருத்த சந்தேகம்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறத்தில் மூப்பனாரும், ஸ்டாலினும் தனியாகஆலோசனை நடத்தினர். இருவரும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆலோசனை முடிந்த கையோடு, அங்கிருந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவை அழைத்துதனியாக பேசியுள்ளார் மூப்பனார். அடுத்தடுத்து நடந்த இரு ஆலோசனைகளும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம்பெற்றுள்ளன.
சண்டைக் கோழி மாதிரி தி.மு.க அணியில் நீடிக்கும் ராமதாசை இழுத்து விட வேண்டும் என்று மனக் கணக்குபோட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை நம்பி இருப்பதா அல்லது அடங்காத தோழமையான பா.ம.க.வைவெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் மூப்பனாரை குடியமர்த்தலாம் என்ற எண்ணத்தில், த.மா.கா.வுக்காக வாசலைதிறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வை ஏற்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் மூப்பனார் என்னமுடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்த ஆலோசனையின் பின்னணி உண்மைகள் தெரியவரும்.
எது எப்படியோ தேர்தலுக்குள் த.மா.கா, பா.ம.கவுக்கு இடப்பெயர்ச்சி நிச்சயம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!